சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் பொறுப்பேற்பு

சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் பொறுப்பேற்பு
Updated on
1 min read

கும்பகோணம்: தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​விடைமருதூர் வட்​டம் சூரிய​னார்​கோ​யில் ஆதீனத்​தின், புதிய ஆதீனகர்த்​த​ராக ஸ்ரீலஸ்ரீ சண்​முக தேசிக பரமாச்​சார்ய சுவாமிகள் நேற்று பொறுப்​பேற்​றுக் கொண்​டார்.

14-ம் நூற்​றாண்டில் தோற்​று​விக்​கப்​பட்ட இந்த ஆதீனத்​துக்கு திரு​வாவடு​துறை ஆதீனம் தம்​பி​ரான் திருக்​கூட்​டத்​தில் இருந்து ஒரு​வர், குரு மகா சந்​நி​தான​மாக நியமிக்​கப்​படு​வது வழக்​கம்.

ஆதீன குரு மகா சந்​நி​தான​மாக இருந்த மகாலிங்க சுவாமி, பெங்​களூரு​வைச் சேர்ந்த பெண் பக்​தரை திரு​மணம் செய்து கொண்​டதையடுத்​து, ஆதீனத்​தின் சாவியை அறநிலை​யத் துறை​யிடம் ஒப்​படைத்​து​விட்​டு, மடத்​தில் இருந்து வெளி​யேறி​னார்.

பின்​னர், சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​பேரில் சூரிய​னார்​கோ​யில் ஆதீன சாவியை, திரு​வாவடு​துறை ஆதீனம் 24-வது குரு மகா சந்​நி​தானம் ஸ்ரீலஸ்ரீ அம்​பல​வாண தேசிக பரமாச்​சார்ய சுவாமிகளிடம், அறநிலை​யத் துறை​யினர் கடந்த மாதம் 13-ம் தேதி ஒப்​படைத்​தனர்.

இதையடுத்​து, சூரிய​னார்​கோ​யில் ஆதீனம் ஒடுக்​கம் மற்​றும் ஆன்​மார்த்த பூஜை அறைக்கு வைக்​கப்​பட்​டிருந்த சீல் அகற்​றப்​பட்​டு, பணி​கள் நடை​பெற்​றன.

இந்​நிலை​யில், திரு​வாவடு​துறை ஆதீனம் தம்​பி​ரான் திருக்​கூட்​டத்​தில் இருந்த ஸ்ரீமத் ராமலிங்க தம்​பு​ரான் சுவாமிகளை, சூரிய​னார்​ கோயில் ஆதீன கர்த்தராக திருவாவடு​துறை ஆதீனம் 24-வது குரு மகா சந்​நி​தானம் ஸ்ரீலஸ்ரீ அம்​பல​வாண தேசிக பரமாச்​சார்ய சுவாமிகள் தேர்வு செய்​தார்.

தொடர்ந்​து, புதிய ஆதீனம் பொறுப்​பேற்பு விழா நேற்று நடை​பெற்​றது. இதில், சூரிய​னார் கோயில் ஆதீனத்​தின் 30-வது குரு மகா சந்​நி​தான​மாக ஸ்ரீலஸ்ரீ சண்​முக தேசிக பரமாச்​சார்ய சுவாமிகள் பொறுப்​பேற்​றுக் கொண்​டார்.

சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் பொறுப்பேற்பு
பழநி முருகன் கோயில் ஒலிபெருக்கியில் தவெக பாடல்: இளைஞர் மீது போலீஸில் புகார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in