கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நிறைவு

புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா முடிந்து கச்சத்தீவு கடற்கரையிலிருந்து மீண்டும் தாயகத்துக்கு புறப்பட்ட இரு நாட்டு பக்தர்கள். படம்: எல். பாலச்சந்தர்

புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா முடிந்து கச்சத்தீவு கடற்கரையிலிருந்து மீண்டும் தாயகத்துக்கு புறப்பட்ட இரு நாட்டு பக்தர்கள். படம்: எல். பாலச்சந்தர்

Updated on
1 min read

ராமநாதபுரம்: கச்​சத்​தீவு புனித அந்​தோணி​யார் ஆலயத் திரு​விழா நேற்று நிறைவடைந்​தது. இங்கு நேற்று முன்​தினம் மாலை கொடியேற்​றத்​துடன் விழா தொடங்​கியது. நெடுந்​தீவு பங்​குத் தந்தை பத்​தி​நாதன்கொடியேற்றி வைத்​தார். தொடர்ந்​து, சிலு​வைப் பாதை, திருப்​பலி, தேர் பவனி உள்​ளிட்ட நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன.

முக்​கிய நிகழ்​வாக நேற்று காலை கூட்டு திருப்​பலி நடை​பெற்​றது. யாழ் மறை மாவட்ட குரு முதல்​வர் ஜோசப்​தாஸ் ஜெபரத்​தினம், நெடுந்​தீவு பங்​குத்​தந்தை பத்​தி​நாதன், ராமேசுவரம் வேர்​கோடு பங்​குத் தந்தை தாமஸ் பரி​பாலன் ஆகியோர் தமிழ் மற்​றும் சிங்கள மொழி​யில் திருப்​பலி நடத்​தினர்.

இதில், இலங்கை கடற்​படை​யின் வைஸ் அட்​மிரல் மனகோ​டா,வடக்கு கட்​டளை தளபதி கேப்​டன் லியங்​கமேகி, இலங்கை மீன்​வளத் துறை அமைச்​சர் ராமலிங்​கம் சந்​திரசேகர், யாழ்ப்​பாணத்​தில் உள்ள இந்​திய துணைத் தூதரக அதி​காரி சாய் முரளி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

மேலும், இந்​தி​யா​விலிருந்து சென்ற 3,741 பேர், இலங்​கையி​லிருந்து சென்ற 9 ஆயிரம் பேர் என 12 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்​டனர். நேற்று காலை பக்​தர்​களுக்கு இலங்கை கடற்​படை சார்​பில் உணவு வழங்​கப்​பட்​டது. பின்​னர், இந்​தி​யா​விலிருந்து சென்ற பக்​தர்​கள் நேற்று மாலை ராமேசுவரம் திரும்​பினர்.

விரை​வில் பேச்​சு​வார்த்​தை... இலங்கை மீன்​வளத்​துறை அமைச்​சர் ராமலிங்​கம் சந்​திரசேகர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “கச்​சத்​தீவு இலங்​கைக்கு சொந்​த​மானது. இந்​தியஇழு​வைப்​படகு மீனவர்​கள் சிலர் சட்​ட​விரோத​மாக செயல்​படு​வ​தால் கடல் வளம் அழிகிறது. இதனால், இந்​தியா மற்​றும் இலங்கை நாட்​டுப்​படகு மீனவர்​கள் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர். இந்​திய இழு​வைப்​படகு உரிமை​யாளர்​கள் தயவு செய்து கடல் வளத்தை அழிக்​கும் வேலையை செய்ய வேண்​டாம்.

கச்​சத்​தீவு பகு​தி​யில் தமிழக மீனவர்​கள் மீன் பிடிப்​பதை அனு​ம​திக்க முடி​யாது. தமிழக அரசி​யல்​வா​தி​கள் தேர்​தல் நேரங்​களில் கச்​சத்​தீவை அரசி​யலுக்​காகப் பயன்​படுத்​துகின்​றனர். இலங்கை ஜனா​திபதி அனுரகு​மார திச​நாயக்கா இந்​தியா வந்​திருந்​த​போது, இரு நாட்டு மீனவர் பிரச்​சினை தொடர்​பாக இந்​தி​யப் பிரதமர் மோடி​யிடம் பேசி​யுள்​ளார். மீனவர் பிரச்​சினைக்கு தீர்​வு​காண விரை​வில் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படும்" என்​றார்.

<div class="paragraphs"><p>புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா முடிந்து கச்சத்தீவு கடற்கரையிலிருந்து மீண்டும் தாயகத்துக்கு புறப்பட்ட இரு நாட்டு பக்தர்கள். படம்: எல். பாலச்சந்தர்</p></div>
ஈரான் மீது சீற்றத்துடன் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் - நிலவரமும் பின்னணியும் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in