ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேர் உற்சவத்தில் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற நெல் அளவை கண்டருளல் நிகழ்ச்சி. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் உபய நாச்சியார்களுடன் நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற நெல் அளவை கண்டருளல் நிகழ்ச்சி. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் உபய நாச்சியார்களுடன் நம்பெருமாள்.

Updated on
1 min read

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயி​லில் தைத்​தேர் உற்​சவத்தை முன்​னிட்டு நம்​பெரு​மாள் நேற்​றிரவு நெல்​லளவு கண்​டருளி​னார். ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயி​லில் பூப​தித் திரு​நாள் எனப்​படும் தைத்​தேர் உற்​சவம் ஜன.23-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது.

அன்று மாலை முதல் தினந்​தோறும் பல்​வேறு வாக​னங்​களில் உபய​நாச்​சி​யார்​களு​டன் நம்​பெரு​மாள் எழுந்​தருளி உத்​திர வீதி​களில் வலம் வந்​தார். இந்​நிலை​யில், நேற்​றிரவு திருக்​கொட்​டாரத்​தில் நம்​பெரு​மாள் எழுந்​தருளி நெல் அளவு கண்​டருளி​னார். இதில் பக்​தர்​கள் திரளானோர் பங்​கேற்று தரிசனம் செய்​தனர்.

தொடர்ந்​து, நம்​பெரு​மாள் தங்​கக் குதிரை வாக​னத்​தில் எழுந்​தருளி வையாளி கண்​டருளும் வைபவம் இன்று (ஜன.30) நடை​பெறுகிறது. விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான தை தேரோட்​டம் நாளை (ஜன.31) காலை நடை​பெறுகிறது.

தொடர்ந்​து, பிப்​.1-ம் தேதி சப்​தாவரணம் நிகழ்ச்​சி​யும், நிறைவு நாளான பிப்​.2-ம் தேதி நம்​பெரு​மாள் ஆளும் பல்​லக்​கில் எழுந்​தருளி உள்​வீ​தி​களில் வலம் வரும் நிகழ்ச்​சி​யும் நடை​பெறுகிறது. விழா ஏற்​பாடு​களை கோயில் இணை ஆணை​யர் சிவ​ராம்​கு​மார் தலை​மை​யில் கோயில் பணி​யாளர்​கள் செய்து வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற நெல் அளவை கண்டருளல் நிகழ்ச்சி. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் உபய நாச்சியார்களுடன் நம்பெருமாள்.</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 ஜனவரி 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in