வைகுண்ட ஏகாதசி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் டிச.30-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் டிச.30-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு
Updated on
1 min read

சென்னை: ​திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி கோயில், 108 வைணவ திருத்​தலங்​களில் மிக​வும் பழமை வாய்ந்​த​தாக விளங்​கு​கிறது. காஞ்​சிபுரம், திரு​வரங்​கம், சோளிங்​கர் திருப்ப​தி, அயோத்​தி, ஆகிய 5 திய்​வ ​தேசத்து எம்​பெரு​மான்​கள் இத்​தலத்​தில் தனித்​தனி சந்நி​தி​களில் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள் ​பாலிக்​கின்​றனர்.

நின்ற கோலத்​தில் வீர நிலை​யில் மீசை​யுடன் வேங்​கடகிருஷ்ண​னாக​வும், இருந்த கோலத்​தில் யோக நிலை​யில் யோக நரசிம்​ம​ராக​வும், கிடந்த கோலத்​தில் போகசயன நிலை​யில் ஸ்ரீரங்​க​நாத​ராக​வும் எல்லா நிலை​யிலும் இத்​தலத்​தில் பெரு​மாள் சேவை தரு​வது சிறப்​பு.

இத்​தகைய சிறப்பு வாய்ந்த திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி கோயி​லில் வைகுண்ட ஏகாசதி விழா ஆண்​டு​தோறும் கோலாகல​மாக நடை​பெறும். இந்த ஆண்டு விழா​வின் பகல்​பத்து டிச.20-ம் தேதி தொடங்​கு​கிறது. அப்போது, ஒவ்​வொரு நாளும் பெரு​மாள் வெவ்​வேறு அலங்​காரத்​துடன் எழுந்​தருளி அருள்​பாலிப்​பார்.

டிச.29-ம் தேதி பகல்​பத்​து முடிவடைந்​து, 30-ம் தேதி பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பு வைபவம் நடை​பெறும். இதையொட்​டி, அதி​காலை 4.15 மணிக்கு உள்​பிர​கார வழி​பாடு நடக்​கிறது. காலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடை​பெற உள்​ளது. காலை 5.30 முதல் 10.30 மணி வரை பொது தரிசனம் நடை​பெறும்.

இரவு 10 மணிக்கு உற்​சவர் திரு​மஞ்​சன​மும், இரவு 11.30 மணிக்கு பார்த்​த​சா​ரதி சுவாமி உற்​சவர் நம்​மாழ்​வாருடன் பெரிய​வீதி புறப்​பாடும் நடை​பெறும். ஜன.9-ம் தேதி வரை நடக்​கும் இராப்​பத்து உற்​சவத்​தில் தின​மும் உற்​சவர் பார்த்​த​சா​ரதி ஒவ்​வொரு திருக்​கோலத்​தில் பக்​தர்​களுக்கு அருள்​பாலிப்​பார்.

டிச.31 முதல் ஜன.7-ம் தேதி வரை 8 நாட்​கள் மாலை 4.15 மணிக்கு பரமபத வாசல் சேவை​யும், 8-ம் தேதி காலை பரமப​த​வாசல் திறப்​பும் நடை​பெறும். ஜன.6-ம் தேதி முதல்​ 14-ம்​ தேதி வரை ஆண்​டாள்​ நீராட்​டு உற்​சவம்​ நடை​பெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் டிச.30-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு
சென்னை விமான நிலையம் அருகில் ‘தமிழ்நாடு ஹஜ் இல்லம்’ - முதல்வர் அடிக்கல் நாட்டினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in