சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் தேர் திருவிழா - திரளான பக்தர்கள் தரிசனம்

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் தேர் திருவிழா - திரளான பக்தர்கள் தரிசனம்

படங்கள்: எஸ்.குரு பிரசாத்

Updated on
1 min read

சேலம்: பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் ஆடிப் பண்டிகையையொட்டி, பக்தர்கள் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்க, தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

சேலத்தின் காவல் தெய்வம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் தமிழக அளவில் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் ஆடிப் பண்டிகை மிகவும் புகழ்பெற்றது. நடப்பாண்டு கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் ஆடிப்பண்டிகை கடந்த மாதம் 21-ம் தேதி இரவு பூச்சாட்டுதலுல், மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஜூலை 28-ம் தேதி கம்பம் நடுதல், ஆக.4-ம் தேதி சக்தி கரகம் அழைப்பு என அடுத்தடுத்து உற்சவங்கள் விமரிசையாக நடைபெற்றன.

ஆடிப்பண்டிகையின் முக்கிய உற்ஸவமான பொங்கல், மா விளக்கு ஆக.5-ம் தேதி நடைபெற்றது. இதில், சேலம் மாநகர மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து பொங்கல் வைத்தும், மா-விளக்கு எடுத்து வந்தும் பெரிய மாரியம்மனை வழிபட்டனர். பக்தர்கள் வசதிக்காக, அன்றைய தினம் சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆடிப் பண்டிகையின் ஒரு பகுதியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. கோயில் ராஜகோபுரம் அருகே அலங்கரிக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான தேரில் எழுந்தருளிய கோட்டை பெரிய மாரியம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

படங்கள்: எஸ்.குரு பிரசாத்

தொடர்ந்து மேளதாளங்கள், செண்டை மேளங்கள் உள்பட வாத்தியங்கள் முழங்க, திரளான பக்தர்கள் வடம் பிடிக்க, பிரம்மாண்டமான திருத்தேர் ஆடி அசைந்தபடி தேர் வீதிகளில் உலா வந்தது.

வழி நெடுகிலும் திராளாக காத்திருந்த பக்தர்கள் பிரம்மாண்டமான தேரில் கம்பீரமாக அமர்ந்து உலா வந்து அருள்பாலித்த கோட்டை பெரிய மாரியம்மனை மனமுருக வழிபட்டனர். தேர் உலாவில், காளியம்மன் வேடமணிந்த அம்பாளை பக்தர்கள், பக்தி பரவசத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் தேர் திருவிழா - திரளான பக்தர்கள் தரிசனம்
தூத்துக்குடியில் இருந்து படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற வெள்ளாடுகள், புறாக்கள் பறிமுதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in