மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலையில் சரண கோஷம் முழங்க கோயில் நடைதிறப்பு

பக்தர்கள் வருகையால் களைகட்டிய சந்நிதானம்; புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல வழிபாட்டுக்காக கருவறையை திறந்து வைத்த மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல வழிபாட்டுக்காக கருவறையை திறந்து வைத்த மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி.

Updated on: 
1 min read

குமுளி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்​டல கால வழிபாட்​டுக்​காக நேற்று மாலை கோயில் நடை திறக்​கப்​பட்​டது. மங்​கல இசை மற்​றும் பக்​தர்​களின் சரண கோஷத்​தால் சந்​நிதானம் களைகட்​டியது. இதனைத் தொடர்ந்து, புதிய மேல்​சாந்​தி​கள் பொறுப்​பேற்​றுக் கொண்​டனர்.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்​டல பூஜை டிச. 27-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதனைத் தொடர்ந்து, 41 நாட்​கள் மண்​டல கால வழிபாட்​டுக்​காக நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்​கப்​பட்​டது. மங்​கல இசை முழங்க மேல்​சாந்தி பிரசாத் நம்​பூதிரி கோயில் கரு​வறையைத் திறந்து வைத்து நெய் தீபம் ஏற்​றினார்.

தொடர்ந்து 18-ம் படி வழியே கீழிறங்கி சென்று ஆழிகுண்​டத்​தில் தேங்​காய் விளக்​கில் தீபம் ஏற்​றினார். பின்பு ஐயப்​பன் விக்​கிரகத்​தின் மேல் பூசப்​பட்​டிருந்த விபூதி, ருத்​ராட்ச மாலை அகற்​றப்​பட்டு யோகநித்​திரை நிலை மாற்​றப்​பட்​டது. இந்த விபூதி பக்​தர்​களுக்கு பிரசாத​மாக வழங்​கப்​பட்​டது.

புதிய மேல்​சாந்​தி​களாக சபரிமலைக்கு சுப்​பிரமணி​யன் நம்​பூதிரி, மாளி​கைப்​புரத்​தம்​மன் கோயிலுக்கு தாமோதரன் நம்​பூதிரி ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்டு இருந்​தனர்.

இவர்​கள் இரு​வரும் இரு​முடி கட்​டுடன் பதினெட்​டாம்​படி வழியே ஏறினர். இவர்​களை முன்​னாள் மேல்​சாந்​தி​களான பிரசாத் நம்​பூதிரி, மனு நம்​பூதிரி ஆகியோர் கரம் பிடித்து அழைத்​துச் சென்​றனர். பின்பு கரு​வறை முன்​புள்ள சோபானம் எனும் புனித படிக்​கட்டு அருகே அமர வைத்து தந்​திரி கண்​டரரு பிரம்​மதத்​தன் இரு​வருக்​கும் சந்​தன அபிஷேகம் செய்து புனிதநீர் தெளித்​தார். பின்​னர், அவர்​களை கரு​வறைக்​குள் அழைத்​துச் சென்று மூல மந்​திரத்தை காதில் உப​தேசித்​தார்.

இதனைத் தொடர்ந்து இரு​வரும் மேல்​சாந்​தி​களாக பொறுப்​பேற்​றுக் கொண்​டனர். தொடர்ந்து நேற்று எவ்​வித பூஜையும் இன்றி தரிசனம் மட்​டுமே நடை​பெற்​றது. பின்​னர் இரவு 11 மணி​யளவில் ஹரிவ​ராசனம் எனும் உறக்​கப் பாடலுடன கோயில் நடை சாத்தப்பட்டது.

முதல்நாளான நேற்று காலை​யில் இருந்தே நிலக்​கல்​லில் பக்​தர்​கள் கூட்​டம் அதி​க​மாக இருந்​தது. இருப்​பினும் மாலை​யில் நடை திறக்​கப்​பட்​ட​தால் பிற்​பகலில் இருந்தே பம்​பைக்​குச் செல்ல அனுமதிக்​கப்​பட்​டனர். மண்​டல வழிபாட்​டுக் காலம் தொடங்​கிய​தால் சந்​நிதானம், பம்பை, நிலக்​கல், எரு​மேலி மட்​டுமல்​லாது வனப்​பாதை மற்​றும் தேனி உள்​ளிட்ட பல்​வேறு வழித்​தடங்​களும் பக்​தர்​கள் வருகை​யால் களை கட்​டியது

<div class="paragraphs"><p>சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல வழிபாட்டுக்காக கருவறையை திறந்து வைத்த மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி.</p></div>
மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் கடைமுழுக்கு தீர்த்தவாரி: காவிரியில் தண்ணீர் இல்லாததால் போர்வெல் நீரில் புனித நீராடிய பக்தர்கள்

X