

கூடலூர்: நிறை புத்தரிசி வழிபாட்டுக்காக சபரிமலைகோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.
விவசாயம் செழிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான பூஜையை முன்னிட்டு நாளை மாலை கோயில் நடைதிறக்கப்படுகிறது.
இந்த வழிபாட்டுக்காக பாலக்காடு, ஆரன்முலா மற்றும் செட்டி குளங்கரா, தென்காசி வயல்களில் இருந்து அறுவடை செய்த நெல்லை பட்டுத் துணியில் தனித்தனிகட்டுகளாக கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நாளை ஊர்வலமாக புறப்பட்டு பாரம்பரிய கோயில்கள் வழியே பவனி வந்து ஆக.3-ம் தேதி சபரிமலைக்கு கொண்டு வரப்படும்.
பின்னர் அவை கருவறை யில் சமர்ப்பிக்கப்பட்டு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு நெல்மணிகள் பிரசாதமாக வழங்கப்பட்டு, அன்று இரவு நடை சாத்தப்படும்.