சபரிமலையில் மண்டல பூஜைக்கான தரிசன முன்பதிவுகள் தொடங்கின!

சபரிமலையில் மண்டல பூஜைக்கான தரிசன முன்பதிவுகள் தொடங்கின!
Updated on
1 min read

குமுளி: சபரிமலை மண்டல பூஜை நாட்களுக்கான தரிசன முன்பதிவுகள் இன்று மாலை தொடங்கின. ஏற்கெனவே முன்பதிவு முடிந்த தேதிகளிலும் புக்கிங் வசதி செய்யப்பட்டதால் பக்தர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில நாட்களாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம், பக்தர்களும், ஸ்பாட் புக்கிங்மூலம் 8, 500 பக்தர்களும் சில வாரங்களாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் வருகின்றனர்.

இருமுடி கட்டி வரும் அவர்களை திருப்பி அனுப்ப விரும்பாத தேவசம்போர்டு நிலக்கல்லில் சுமார் 3 மணி நேரம் காத்திருக்க வைத்து நெரிசல் குறையும்போது அவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் செய்து அனுப்புகின்றனர். பலரும் முன்பதிவு செய்த தேதியில் வருவதில்லை. இதனால் தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் வேறுபட்டுக் கொண்டே இருக்கிறது.

மண்டல பூஜை தினமான வரும் 27-ம் தேதியும், அதற்கு முந்தைய தின தரிசன முன்பதிவும் இதுவரை அனுமதிக்கப்படாமல் இருந்தது. பயண ஏற்பாடுகளை முன்னதாகவே திட்டமிட்டுக் கொள்ளும் வகையில் இந்த இரண்டு நாட்களுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிக்குத் தொடங்கி உள்ளது.

26-ம் தேதி 30,000 பக்தர்களும், 27-ம் தேதி 35,000 பேரும் முன்பதிவு மூலம் அனுமதிக்கப்பட உள்ளனர். இதுதவிர ஸ்பாட் புக்கிங் மூலம் 5,000 பேரும் தரிசனம் செய்யலாம்.

இந்நிலையில், பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு முடிந்திருந்த நாட்களான டிச.12, டிச.17, டிச.21, டிச. 24, 25 உள்ளிட்ட பல தேதிகள் முன்பதிவுக்காக மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் பக்தர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இது குறித்த எந்த அறிவிப்பும் தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கவில்லை. முடிந்த தேதிகளிலும் முன்பதிவு செய்யலாம் என்ற நிலை குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலையில் மண்டல பூஜைக்கான தரிசன முன்பதிவுகள் தொடங்கின!
‘பி.ஆர்.பாண்டியனை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை’ - அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in