திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரத ஏற்பாடுகள் மும்முரம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரத ஏற்பாடுகள் மும்முரம்
Updated on
1 min read

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி வரலட்​சுமி விரதம் கடைப்பிடிக்​கப்பட உள்ளதை முன்​னிட்​டு, அதற்​கான ஏற்​பாடு​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயி​லில் ஆண்டு தோறும் வரலட்​சுமி விரதம் வெகு விமரிசை​யாகக் கொண்​டாடப்படு​வது வழக்​கம். இந்த ஆண்டு வரும் 21-ம் தேதி, கோயி​லில் சிறப்பு அபிஷேகம் மற்​றும் கலச பூஜைகள் நடை​பெறவுள்​ளன. இதற்கான விரி​வான ஏற்​பாடுகளைத் திரு​மலை திருப்​பதி தேவஸ்தானம் மும்​முர​மாக மேற்​கொண்டு வரு​கிறது.

இது தொடர்​பாகத் திரு மலை​யில் தேவஸ்​தான அறங்​காவலர் குழுத் தலை​வர் பி.ஆர்​.​நா​யுடு, அதி​காரி​கள் மற்​றும் அர்ச்சகர்களுடன் ஆலோ​சனைக் கூட்​டம் நடத்​தி​னார். கூட்​டத்​தில் திருச்​சானூர் கோயில் துணை நிர்​வாக அதி​காரி ஹரீந்​திர​நாத், கோயில் பிர​தான அர்ச்​சகர் பாபு சுவாமி உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​டனர்.

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்த ஹைத​ரா​பாத்​தைச் சேர்ந்த 'ட்​ரினிட்டி கம்​பைன்ட் பிரைவேட் லிமிடெட்' நிறு​வனத்​தின் நிர்​வாகி​கள் சீதா​ராம், கவிதா, திரணய் மற்​றும் திரிபுவன் ஆகியோர், தேவஸ்​தான கூடுதல் நிர்​வாக அதி​காரி வெங்​கைய சவுத்​ரியைச் சந்​தித்​து, பிராண​தான அறக்​கட்​டளைக்​காக ரூ.2 கோடிக்​கான காசோலையை நன்​கொடை​யாக வழங்​கினர்​.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரத ஏற்பாடுகள் மும்முரம்
தமிழக பட்ஜெட் 2026-27: வெற்றி மடிக்கணினி முதல் நவீன சைக்கிள் வரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in