வடபழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலம்: அலகு குத்தி, காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

திருவல்லிக்கேணி 8-ம் படை வீடு திருமுருகனுக்கு 41-வது ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். | படம்: எல்.சீனிவாசன் |

திருவல்லிக்கேணி 8-ம் படை வீடு திருமுருகனுக்கு 41-வது ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். | படம்: எல்.சீனிவாசன் |

Updated on
1 min read

சென்னை: வடபழனி முருகன் கோயி​லில் பங்​குனி உத்​திரத் திரு​விழா கோலாகல​மாக நடை​பெற்​றது. அலகு குத்​தி, பால்​குடம், காவடி எடுத்து பக்​தர்​கள் வழி​பாடு செய்​தனர்.

சென்​னை​யின் புகழ்​பெற்ற ஆன்​மிகத் தலமான வடபழனி முரு​கன் கோயி​லில், பங்​குனி உத்​திரத் திரு​விழாவை முன்​னிட்டு, கடந்த 31-ம் தேதி வரை லட்​சார்ச்​சனை பூஜைகள் நடை​பெற்​றன. ஹோமங்​களும், ஆறு கால சிறப்​புப் பூஜைகளும் ஆகம விதிப்​படி நடத்​தப்​பட்​டன.

முக்​கிய நிகழ்​வான பங்​குனி உத்​திரத் தினமான நேற்று அதி​காலை​யிலேயே நடை திறக்​கப்​பட்​டு, முரு​கப்​பெரு​மானுக்​குப் பால், பன்​னீர், இளநீர் உள்​ளிட்ட திர​வி​யங்​களால் சிறப்பு அபிஷேகங்​களும், மகா தீபா​ராதனை​யும் நடை​பெற்​றன.

நேற்று அதி​காலை முதலே ஏராள​மான பக்​தர்​கள் தங்​களின் நேர்த்​திக் கடனைச் செலுத்த பால்​குடம் ஏந்​தி​யும், அலகு குத்​தி​யும் ஊர்​வல​மாக வந்​து சுவாமி தரிசனம் செய்தனர். குறிப்​பாக, சாலிகி​ராமம், தசரத​புரத்​தில் இருந்து திரளான பெண்​கள் பால்​குடம் எடுத்து வந்து முரு​க​னைத் தரிசித்​தனர்.

<div class="paragraphs"><p>மயிலாப்பூர் கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கோயில் பங்குனி திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு நடந்தது. கல்யாண கோலத்தில் சுவாமி, அம்பாள்.| படம்: ம.பிரபு |&nbsp;</p></div>

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கோயில் பங்குனி திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு நடந்தது. கல்யாண கோலத்தில் சுவாமி, அம்பாள்.| படம்: ம.பிரபு | 

பன்​னீர் காவடி, புஷ்பக் காவடி ஏந்தி வந்த பக்​தர்​கள், “முரு​க​னுக்கு அரோக​ரா, கந்​தனுக்கு அரோக​ரா” என எழுப்​பிய பக்தி முழக்​கம், அப்​பகுதி முழு​வதும் எதிரொலித்​தது.

விழா​வின் சிறப்​பம்​ச​மாக, நேற்று இரவு 7 மணி​யள​வில் முரு​கப்​பெரு​மான் விசேஷ அலங்​காரத்​தில் திரு​வீதி உலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார். இதனைத் தொடர்ந்​து, இன்று (2-ம் தேதி) முதல் 3 நாட்​களுக்​குத் தெப்​பத் திரு​விழா நடை​பெற உள்​ளது.

இன்று வடபழனி ஆண்​ட​வர் தெப்​பத்​தில் காட்​சி​யளிக்​கிறார். நாளை (3-ம் தேதி) சண்​முகர் வள்ளி - தெய்​வானை சமேத​ராக வலம் வரு​வார். ஏப்​.4-ம் தேதி சுப்​பிரமணி​யர் வள்ளி - தெய்​வானை​யுடன் தெப்​பத்​தில் எழுந்​தருளு​வார்.

இதே​போல், திரு​வல்​லிக்​கேணி எட்​டாம் படை வீடு முரு​கன் கோயில், பாரி​முனை கந்​தக்​கோட்​டம் உள்​ளிட்ட நகரின் அனைத்து முரு​கன் கோயில்​களி​லும் பங்​குனி உத்​திரத் திரு​விழா பக்தி பரவசத்​துடன் வெகு விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது.

<div class="paragraphs"><p>திருவல்லிக்கேணி 8-ம் படை வீடு திருமுருகனுக்கு 41-வது ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். | படம்: <em>எல்.சீனிவாசன்</em> |</p></div>
ஊட்டி மலை ரயில் பாதையில் முகாமிட்ட யானைகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in