சபரிமலையில் 18-ம் தேதி புதிய மேல்சாந்திகள் தேர்வு: நவ.17-ல் மண்டல பூஜை தொடக்கம்

சபரிமலையில் 18-ம் தேதி புதிய மேல்சாந்திகள் தேர்வு: நவ.17-ல் மண்டல பூஜை தொடக்கம்
Updated on: 
1 min read

குமுளி: சபரிமலை​யில் மண்டல பூஜை நவ.17-ம் தேதி தொடங்​க​வுள்ள நிலை​யில், புதிய மேல்​சாந்​தி​கள் தேர்வு வரும் 18-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதில் தேர்வு செய்​யப்​படு​பவர்​கள் மண்டல கால வழி​பாடு​களில் இருந்து பூஜைகளை தொடர்ந்து மேற்​கொள்​வர்.

கேரளம் மாநிலம் சபரிமலை​யில் இந்த ஆண்டு மண்டல பூஜை காலம் நவ.17-ல் தொடங்க உள்​ள​தால் புதிய மேல்​சாந்​தி​களுக்​கான முதல்​கட்ட தேர்வு முடிந்​துள்​ளது. இதில் 5 பேர் சந்​நி​தானத்​துக்​கும், 3 பேர் மாளி​கைபுரத்​துக்​கும் பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில் துலாம் (ஐப்​பசி) மாத வழி​பாட்​டுக்​காக வரும் 17-ம் தேதி மாலை கோயில் நடை திறக்​கப்பட உள்​ளது.

இதைத் தொடர்ந்​து, மறு​நாள் காலை நேர வழி​பாட்​டுக்​குப் பிறகு மேல்​சாந்​தி​களின் இறு​திக்​கட்ட தேர்வு நடை​பெற உள்​ளது. முதல்​கட்ட தேர்​வில் தேர்​வான​வர்​களின் பெயர்​கள் சீட்​டு​களில் எழுதப்​பட்​டு, அவற்றை குடங்​களில் இட்டு குட​வோலை முறை​யில் பந்தள வம்ச குழந்​தைகள் புதிய மேல்​சாந்​தியை தேர்வு செய்​வர். தேர்வு செய்​யப்​படும் புதிய மேல்​சாந்​தி​கள் கார்த்​திகை முதல் தேதி​யில் இருந்து வழி​பாடு​களை மேற்​கொள்​வர்.

சபரிமலை​யில் மண்​டல, மகர விளக்கு வழி​பாடு​களுக்கு தின​மும் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் வரு​வார்​கள் என்​ப​தால் அதற்​கான முன்​னேற்​பாடு​களை தேவசம் போர்டு நிர்​வாகி​கள் மேற்​கொண்டு வரு​கின்​ற​னர். இருப்​பினும், இப்​பணி முழு வீச்​சில் நடை​பெற​வில்லை என புகார் எழுந்​துள்​ளது.

கடந்த ஆண்​டு​களில் மண்​டல, மகர விளக்கு பூஜை​களின்​போது அதிக குளறு​படிகள் ஏற்​பட்​டன. வனப்​பாதை​யில் வருபவர்​களுக்கு சிறப்பு தரிசனம், தின​மும் அன்​ன​தான விருந்​து, நெரிசலற்ற தரிசனம், அடிப்​படை வசதி​கள் போன்​றவற்​றில் குளறு​படி ஏற்​பட்​டது. இதனால் பக்​தர்​கள் மனம் சஞ்​சலப்​படும் நிலை உரு​வானது. இந்த ஆண்​டும் முறை​யான திட்​ட​மிடல்​களை தேவசம் போர்டு இது​வரை தொடங்​க​வில்​லை.

இதனால் கூட்ட மேலாண்​மை, தரிசனத்தை ஒழுங்​குபடுத்​துதல் போன்​றவை கேள்விக்​குறி​யாகவே உள்​ளது. இதுகுறித்து தேனி வீர​பாண்​டியயை சேர்ந்த ஐயப்ப பக்​தர் மணி​கண்​டன் உள்​ளிட்ட சிலர் கூறும்​போது, “சபரிமலை​யில் பக்​தர்​களை கட்​டுக்​கடங்​காமல் அனு​ம​திப்​பதே பல்​வேறு பிரச்​சினை​களுக்​கும் காரணம். நிர்​ண​யிக்​கப்​பட்ட எண்​ணிக்​கை​யில் முன்​ப​திவு மூலம் அனு​ம​தித்​தால் நெரிசலற்ற தரிசனம், உணவு, சுகா​தா​ரம், தங்​குதல் உள்​ளிட்ட அனைத்து வசதி​களும் நிறை​வாக இருக்​கும்” என்​றனர்.

சபரிமலையில் 18-ம் தேதி புதிய மேல்சாந்திகள் தேர்வு: நவ.17-ல் மண்டல பூஜை தொடக்கம்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் முதல்வர் விஜய் சந்திப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in