நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Updated on
1 min read

நாகப்பட்டினம்: பிரசித்திப் பெற்ற நாகூர் ஆண்​ட​வர் தர்​கா​வில் 469-ம் ஆண்டு கந்​தூரி விழா கொடியேற்​றம் நேற்று இரவு நடை​பெற்றது. இதை முன்​னிட்டு புனிதக் கொடி ஊர்​வலம் நேற்று மாலை நாகை மீரா பள்​ளி​வாசல் அரு​கில் இருந்து புறப்​பட்​டது.

யாகூசன் பள்ளி தெரு, நூல்​கடை சந்​து, சாலப்​பள்​ளித் தெரு, வெங்​காய கடைத்​தெரு, பெரியகடை வீதி, வெளிப்​பாளை​யம், காடம்​பாடி, பால்​பண்​ணைச்​சேரி வழி​யாக நடை​பெற்ற கொடி ஊர்​வலம் இரவு நாகூரைச் சென்​றடைந்​தது.

ஊர்​வலத்​தில் மந்​திரி கப்​பல், செட்டி பல்​லக்​கு, சின்ன ரதம் என ஏராள​மான வாக​னங்​கள் இடம் பெற்​றிருந்​தன. நாகூர் எல்​லையை அடைந்த ஊர்​வலத்​துக்கு சிறப்பு வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. பின்​னர் நாகூரின் முக்​கிய வீதி​கள் வழி​யாக நடை​பெற்ற கொடி ஊர்​வலம் இரவு 9 மணிக்கு மேல் தர்​காவை வந்​தடைந்​தது.

பின்​னர், நாகூர் தர்கா பரம்​பரை கலிபா சிறப்பு துவா ஓதி​யதும், 5 மினா​ராக்​களி​லும் ஒரே நேரத்​தில் கொடிகள் ஏற்​றப்​பட்​டன. விழாவையொட்டி நாகூர் ஆண்​ட​வர் தர்கா மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்​டிருந்​தது.

நாகூர் பகுதி விழாக்​கோலம் பூண்​டிருந்​தது. நாட்​டின் பல்​வேறு பகு​தி​களி​லிருந்​தும் வந்​திருந்த ஏராள​மானோர் நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொண்​டனர்.

இதையொட்​டி, போலீ​ஸார் பலத்த பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். கந்​தூரி விழா​வின் முக்​கிய நிகழ்​வு​களாக வரும் 30-ம் தேதி இரவு நாகை​யில் இருந்து சந்​தனக் கூடு ஊர்​வலம் புறப்​பாடு, டிச. 1-ம் தேதி அதி​காலை சந்​தனம் பூசும் வைபவம் ஆகியவை நடை​பெறுகின்​றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in