வேலூரில் மயான கொள்ளை திருவிழா கோலாகலம்!

வேலூரில் மயான கொள்ளை திருவிழாவையொட்டி, கடவுள், தேவதைகள் வேடமணிந்து ஊர்வலமாக  சென்று நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள். | படங்கள்: வி.எம்.மணிநாதன். |

வேலூரில் மயான கொள்ளை திருவிழாவையொட்டி, கடவுள், தேவதைகள் வேடமணிந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள். | படங்கள்: வி.எம்.மணிநாதன். |

Updated on
1 min read

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மயான கொள்ளை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வேலூர் பாலாற்றங்கரையில் நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.

வேலூர் மாவட்டத்தில் மயான கொள்ளை திருவிழா நேற்று வெகு சிறப்பாக கொண் டாடப்பட்டது. இதில், வேலூர் பாலாற்றங்கரையில் நடைபெறும் விழா பிரசித்தி பெற்றது.

விழாவையொட்டி வேலூர் சைதாப்பேட்டை, தோட்டப் பாளையம், மக்கான், சத்து வாச்சாரி, விருதம்பட்டு உட்பட நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோயிலில் இருந்து ஊர்வலமாக பாலாற்றங்கரைக்கு எடுத்து வந்தனர்.

ஊர்வலத்தின் பின்னால் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் காளியம்மன், முருகன், சிவன், விநாயகர், அங்காளபரமேஸ்வரி அம்மன் போன்ற கடவுள் வேடமிட்டு சென்றனர்.

<div class="paragraphs"><p>வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றங்கரையில் நேற்று மாலை  குவிந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.</p></div>

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றங்கரையில் நேற்று மாலை குவிந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

வேலூர் - காட்பாடியைச் சேர்ந்த பக்தர்கள் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரை மயானம் நோக்கி தேரில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி சிலைகளுடன் ஊர்வலம் சென்றனர்.

அங்கு மயானத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடத்தி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். மயானத்தில் உள்ள முன்னோர்களின் சமாதி களுக்கு சென்று பொதுமக்கள் படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள் பின்னர் உப்பு, மிளகு, சுண்டல், கொழுக் கட்டை போன்றவற்றை சூறை யிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். மயான கொள்ளை திரு விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் 500 போலீஸார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகரில் வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

<div class="paragraphs"><p>வேலூரில் மயான கொள்ளை திருவிழாவையொட்டி, கடவுள், தேவதைகள் வேடமணிந்து ஊர்வலமாக  சென்று நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள். | <em>படங்கள்: வி.எம்.மணிநாதன்.</em> |</p></div>
ரோப் கார் திட்டத்துக்காக கொடைக்கானலில் ஆய்வு செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in