வைகை ஆற்றில் கள்ளழகர்: ‘கோவிந்தா’ கோஷம் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்

சித்திரை திருவிழா கோலாகலம்
மதுரை சித்திரைத் திருவிழாவில் புதூர் பகுதியில் நேற்று நடைபெற்ற எதிர் சேவையில் கள்ளழகரைக் காண குவிந்த பக்தர்கள். (உள்படம்) கள்ளழகர் திருக்கோலத்தில் அருள்பாலித்த சுந்தரராஜ பெருமாள். படங்கள்: என்.தங்கரத்தினம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் புதூர் பகுதியில் நேற்று நடைபெற்ற எதிர் சேவையில் கள்ளழகரைக் காண குவிந்த பக்தர்கள். (உள்படம்) கள்ளழகர் திருக்கோலத்தில் அருள்பாலித்த சுந்தரராஜ பெருமாள். படங்கள்: என்.தங்கரத்தினம்

Updated on
1 min read

மதுரை: மதுரை சித்​திரைத் திரு​விழா​வில் இன்று அதி​காலை வைகை ஆற்​றில் கள்​ளழகர் எழுந்​தருளி​னார். லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

மதுரை கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா ஏப். 27-ம் தேதி தொடங்கி மே 6-ம் தேதி வரை நடை​பெறுகிறது. மண்​டூக முனிவருக்கு சாப​விமோசனம் அளிப்​ப​தற்​காக நேற்று முன்​தினம் தங்​கப் பல்​லக்​கில் கள்​ளழகர் திருக்​கோலத்​தில் சுந்​தர​ராஜ பெரு​மாள் புறப்​பட்​டார். அவரை எதிர்​கொண்டு வரவேற்​கும் எதிர்​சேவை நிகழ்ச்சி மதுரை மாநகர எல்​லை​யான மூன்​று​மாவடி​யில் நேற்று அதி​காலை 5.30 மணி​யள​வில் நடை​பெற்​றது. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கள்​ளழகரை தரிசனம் செய்​தனர்.

பின்​னர், புதூர் மாரி​யம்​மன் கோயில், ரிசர்வ் லைன் மாரி​யம்​மன் கோயில், அவுட்​போஸ்ட் மாரி​யம்​மன் கோயில், அம்​பலக்​காரர் மண்​டகப்​படிகளில் எழுந்​தருளி இரவு 8.30 மணி​யள​வில் தல்​லாகுளம் பிரசன்ன வெங்​க​டாசலபதி கோயிலுக்கு கள்​ளழகர் வந்​தடைந்​தார்.

அங்கு திரு​மஞ்​சன​மாகி தங்​கக் குதிரை வாக​னத்​தில் எழுந்​தருளி, ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்​டாள் நாச்​சி​யார் சூடிக்​கொடுத்த மாலையை அணிந்​து​ கொண்​டார். இன்று (மே 1) அதி​காலை கோயி​லில் இருந்து புறப்​பா​டாகி தல்​லாகுளம் கருப்​பண​சாமி கோயில் முன் ஆயிரம் பொன் சப்​பரத்​தில் எழுந்​தருளி​னார்.

அங்​கிருந்து வைகை ஆறு நோக்கி தங்​கக் குதிரை வாக​னத்​தில் புறப்​பட்​டார். எழுத்​தாணிக்​காரத்​தெரு வீர​ராகவ பெரு​மாள் வெள்ளி குதிரை வாக​னத்​தில் வரவேற்க, அதி​காலை 5.35 மணி முதல் 5.55 மணிக்​குள் கள்​ளழகர் வைகை ஆற்​றில் எழுந்​தருளி​னார். `கோ​விந்​தா.. கோவிந்தா..' என்ற கோஷம் முழங்க பக்​திப் பெருக்​குடன் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர்.

பின்​னர், காலை 7.25 மணி​யள​வில் வையாளி​யாகி வீர​ராகவப் பெரு​மாளுக்கு மாலை சாற்​றி​விட்டு அங்​கிருந்து ராம​ராயர் மண்​டகப்​படிக்கு புறப்​படு​கிறார். அங்கு பக்​தர்​கள் தண்​ணீர் பீய்ச்சி அடித்து கள்​ளழகரை குளிர்​விப்​பார்​கள். இன்​றிரவு வண்​டியூர் வீர​ராகவப் பெரு​மாள் கோயி​லில் தங்​கு​கிறார். நாளை தேனூர் மண்​டகப்​படி​யில் மண்​டூக முனிவருக்கு கள்​ளழகர் சாப​விமோசனம் அளிக்​கிறார். அன்​றிரவு ராம​ராயர் மண்​டபத்​தில் விடிய விடிய தசாவ​தா​ரம் நடை​பெறும்.

மே 3-ல் ராம​ராயர் மண்​டகப்​படியி​லிருந்து அனந்​த​ராயர் பல்​லக்​கில் ராசாங்க திருக்​கோலத்​தில் ராம​நாத​புரம் மன்​னர் சேதுபதி மண்​டபம் செல்​கிறார். மே 4-ல் ராம​நாத​புரம் மன்​னர் சேதுபதி மண்​டபத்​திலிருந்து அதி​காலை 2.30 மணி​யள​வில் பூப்​பல்​லக்​கில் கள்​ளழகர் திருக்​கோலத்​தில் எழுந்​தருள்​கிறார். மே 5-ம் தேதி காலை 10.40 மணி​யள​வில் அழகர் கோயிலை சென்​றடைகிறார். மே 6-ல் உற்சவ சாந்​தி​யுடன் திரு​விழா நிறைவு பெறுகிறது.

7,500 போலீ​ஸார் பாது​காப்பு: கள்​ளழகர் வைகை ஆற்​றில் எழுந்​தருள்​வதையொட்டி தல்​லாகுளம், கோரிப்​பாளை​யம், ஆழ்​வார்​புரம், வைகை வடகரை உள்​ளிட்ட பகு​தி​களில் விரி​வான பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டன. தென் மண்டல ஐஜி விஜயேந்​திர பிதா​ரி, மதுரை மாநகர காவல் ஆணை​யர் அபிஷேக் தீட்​சித் மேற்​பார்​வை​யில் மொத்​தம்​ 7,500 போலீ​ஸார்​ பாது​காப்​பு பணி​யில்​ ஈடு​படுத்​தப்​பட்​டனர்​

<div class="paragraphs"><p>மதுரை சித்திரைத் திருவிழாவில் புதூர் பகுதியில் நேற்று நடைபெற்ற எதிர் சேவையில் கள்ளழகரைக் காண குவிந்த பக்தர்கள். (உள்படம்) கள்ளழகர் திருக்கோலத்தில் அருள்பாலித்த சுந்தரராஜ பெருமாள். படங்கள்: என்.தங்கரத்தினம்</p></div>
ஷுப்மன் கில் அதிரடியில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in