வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, வடபழனி முருகன் கோயில்களில் திரளான பெண்கள் வழிபாடு

வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, வடபழனி முருகன் கோயில்களில் திரளான பெண்கள் வழிபாடு
Updated on
1 min read

சென்னை: வரலட்சுமி விரதத்தை முன்​னிட்டு சென்​னை​யில் அஷ்டலட்​சுமி, வடபழனி கோயில்​களில் திரளான பெண்​கள் வழி​பாடு நடத்​தினர்.

செல்​வத்​தின் அதிப​தி​யான ஸ்ரீமகாலட்​சுமி​யின் அருளைப் பெற வேண்டி கடைபிடிக்​கப்​படும் ‘வரலட்​சுமி விரதம்’ நேற்று கொண்​டாடப்​பட்​டது.

திரு​மண​மான பெண்​கள் கணவருக்கு நீண்ட ஆயுள், ஆரோக்​கி​யம் வேண்​டி​யும், கன்​னிப்​பெண்​கள் நல்ல கணவன் கிடைக்க வேண்​டி​யும், குடும்ப நலனுக்​காக​வும் இந்த விரதத்தை மேற்​கொண்​டனர்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலட்​சுமி கோயி​லில் வரலட்​சுமி விரத பூஜை விமரிசை​யாக நடை​பெற்​றது. கோயில் தக்​கார்/ துணை ஆணை​யர் எஸ்​.நித்யா மற்​றும் செயல் அலு​வலர் பெ.சக்தி ஆகியோரது மேற்​பார்​வை​யில் இதற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன.

காலை 6.30 மணிக்கு விஸ்​வரூப தரிசனத்​துடன் வழி​பாடு தொடங்​கியது. காலை 7.30 மணி முதல் ‘குபேர ஹோமம்’, ‘ஸ்ரீஸுக்த ஹோமம்’ நடத்​தப்​பட்​டு, மதி​யம் 12 மணி அளவில் பக்​தர்​களுக்கு பிர​சாதம் வழங்​கப்​பட்​டது.

மாலை​யில் மகாலட்​சுமிக்கு சிறப்பு புஷ்ப அலங்​காரங்​கள் செய்​யப்​பட்​டு, 4.30 மணிக்கு விசேஷ பூஜை நடை​பெற்​றது. இதில் அஷ்டமங்​கலப் பொருட்​களு​டன் வைத்து பூஜிக்​கப்​பட்ட நோன்​புச் சரடு​கள், பெண்​களுக்கு பிர​சாத​மாக வழங்​கப்​பட்​டன. மாலை 6 மணிக்கு சாயங்​கால பூஜை நடை​பெற்​றது. இரவு 9 மணிக்கு சயன பூஜை​யுடன் விழா நிறைவடைந்​தது.

வடபழனி முரு​கன் கோயி​லில் உள்ள மீனாட்சி அம்​மனுக்கு நேற்று காலை 8.30 மணிக்கு மஞ்​சள் காப்பு அபிஷேகம் நடை​பெற்​றது. மாலை​யில் அம்​மனுக்கு பட்​டுப் புடவை சார்த்​தி, சிறப்பு அலங்​காரங்​கள் செய்​யப்​பட்​டன.

லலிதா சகஸ்​ர​நாம பாராயணம் செய்த பெண்​களுக்கு ரவிக்கை துணி, மாங்​கல்ய சரடு உள்​ளிட்​டவை வழங்​கப்​பட்​டன. கோயிலுக்கு வந்த அனைத்து பெண்​களுக்​கும் மாங்​கல்ய சரடு வழங்​கப்​பட்​டது. இதே​போல, சென்​னை​யின் பல்​வேறு பகு​தி​களில் உள்ள லட்​சுமி ஆலயங்​களி​லும் சிறப்பு வழி​பாடு​கள் நடை​பெற்​றன.

வீடு​களி​லும் பெண்​கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்​டனர். சுவரில் ஸ்ரீமகாலட்​சுமி ஓவி​யத்தை வரைந்​தும், கலசம் வைத்து அதில் மகாலட்​சுமியை ஆவாஹனம் செய்​தும், நோன்​புச் சரடு கட்டி பெண்​கள் வழி​பாடு செய்​தனர்.

பாயசம், பொங்​கல், வடை, கொழுக்​கட்​டை, பழங்​கள் உள்​ளிட்​ட​வற்றை மகாலட்​சுமிக்கு நைவேத்​தி​யம்​ செய்​து, பூஜையை நிறைவு செய்தனர்.

வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, வடபழனி முருகன் கோயில்களில் திரளான பெண்கள் வழிபாடு
தொகுதி பிரச்சினைகளைப் பேச எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை: பிரேமலதா விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in