குலசேகரன்பட்டினத்தில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்: நள்ளிரவில் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்

தசரா திருவிழா இன்று நிறைவு பெறுகிறது
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மகிஷா சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் வேடமணிந்து ஆவேசமாக கோயிலுக்குள் ஓடிவந்த பக்தர். படங்கள்: என்.ராஜேஷ்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மகிஷா சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் வேடமணிந்து ஆவேசமாக கோயிலுக்குள் ஓடிவந்த பக்தர். படங்கள்: என்.ராஜேஷ்

Updated on: 
1 min read

தூத்துக்குடி: குலசேகரன்​பட்​டினம் முத்​தா​ரம்​மன் கோயில் தசரா திரு​விழா​வில் நேற்று நள்​ளிர​வில் மகிஷாசூர சம்​ஹாரம் நடை​பெற்​றது. இதில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​றனர்.

திருச்​செந்​தூர் அருகே குலசேகரன்​பட்​டினத்​தில் உள்ள முத்​தா​ரம்​மன் கோயி​லில் தசரா திரு​விழா இம்​மாதம் 11-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. பக்​தர்​கள் காப்​புக் கட்டி, பல்​வேறு வேடங்​கள் அணிந்து, ஊர் ஊராகச் சென்று அம்​மனுக்கு காணிக்கை வசூலித்​தனர். தினமும் இரவு 10 மணிக்கு மேல் அம்​மன் பல்​வேறு திருக்​கோலங்​களில் எழுந்​தருளி திரு​வீதி​யுலா வந்​தார்.

விழா​வின் முக்​கிய நிகழ்​வான மகிஷாசூர சம்​ஹாரம் நேற்று நள்​ளிரவு நடை​பெற்​றது. இதை முன்​னிட்டு நேற்று முன்​தினம் மாலை​யில் இருந்தே பக்​தர்​கள் குலசேகரன்​பட்​டினத்​தில் குவியத் தொடங்​கினர்.

முத்​தா​ரம்​மனுக்கு நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், 10.30 மணிக்கு மகாஅபிஷேகமும் நடை​பெற்​றது. இரவு 11 மணி அளவில் அம்​மனுக்கு சிறப்பு அலங்​கார பூஜை நடை​பெற்​றது. இதைத் தொடர்ந்து நள்​ளிரவு 12 மணிக்​குமேல் சிம்ம வாக​னத்​தில் கடற்​கரை சிதம்​பரேஸ்வரர் கோயில் முன்​பாக எழுந்​தருளிய அம்​மன், பல்​வேறு உரு​வங்​களில் வந்த மகிஷாசூரனை வதம் செய்​தார்.

அப்​போது, கடற்​கரையில் திரண்​டிருந்த லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் ‘தாயே முத்​தா​ரம்மா’, ‘ஓம் காளி, ஜெய்​காளி’, ‘வெற்றி அம்​மனுக்கே’ என விண்​ணதிர முழக்​கமிட்​டனர். பின்​னர் கடற்​கரை மேடை, சிதம்​பரேஸ்வரர் கோயில், அபிஷேக மேடை மற்​றும் கோயில் கலை​யரங்​கில் எழுந்​தருளிய அம்​மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடை​பெற்​றன. தசரா குழு​வினர் விடிய விடிய கலைநிகழ்ச்​சிகள் நடத்​தி​ய​தால் குலசேகரன்​பட்​டினம் களைகட்​டி​யிருந்​தது.

சூரசம்​ஹாரத்தை முன்​னிட்டு திருநெல்​வேலி சரக டிஐஜி திருநாவுக்​கரசு, மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் ரா.சிவபிரசாத் தலை​மையில் 4 எஸ்பிக்​கள், 14 ஏடிஎஸ்​பிக்​கள், 47 டிஎஸ்​பிக்​கள் உள்​ளிட்ட 3,700 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

இன்று (அக்.21) காலை 6 மணிக்கு அம்​மன் பூஞ்​சப்​பரத்​தில் திரு​வீதி​யுலா புறப்​படு​கிறார். மாலை 4 மணிக்கு அம்​மன் கோயிலை வந்​தடைந்​தவுடன் பக்​தர்​கள் காப்பு அவிழ்த்து தங்​கள் வேடங்​களை களைந்து விரதத்தை நிறைவு செய்​கின்​றனர். விழா ஏற்​பாடுகளை அறங்​காவலர் குழுத் தலை​வர் வே.கண்​ணன், இணை ஆணை​யர் தி.சு.ரோஜாலி சுமதா, உதவி ஆணை​யர் ரா.ராமசுப்​பிரமணி​யன், செயல் அலு​வலர் மு.வள்​ளி​நாயகம் மற்​றும் அறங்​காவலர்​கள் செய்​திருந்​தனர்.

<div class="paragraphs"><p>குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மகிஷா சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் வேடமணிந்து ஆவேசமாக கோயிலுக்குள் ஓடிவந்த பக்தர். படங்கள்: என்.ராஜேஷ்</p></div>
நாதக தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா கைது: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in