ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா: நம்பெருமாள் புறப்பாடு

இன்று உறியடி உற்சவம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா: நம்பெருமாள் புறப்பாடு
Updated on
1 min read

திருச்சி: கிருஷ்ண ஜெயந்​தி​யை முன்னிட்டு ஸ்ரீரங்​கம் நம்​பெரு​மாள், கிருஷ்ணர் ஆகியோர் இன்று உறியடி உற்​சவம் கண்டருள்கின்​றனர்.

கிருஷ்ண ஜெயந்​தி​யையொட்டி ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் கோயி​லில் நேற்று காலை நம்​பெரு​மாள் மூலஸ்​தானத்​தில் இருந்து புறப்​பாடு கண்​டருளி​னார். தொடர்ந்​து, பண்​டாரம் ஆஸ்​தான மண்​டபம் வந்து சேர்ந்த நம்​பெரு​மாளுக்​கு, திரு​மஞ்​சனம், அலங்​காரம் அமுது செய்​தல், பொதுஜன சேவை நடை​பெற்​றது. மாலை​யில் மண்​டபத்​தில் இருந்து புறப்​பட்டு நம்​பெரு​மாள் மூலஸ்​தானம் சென்​றடைந்​தார்.

இன்​று (செப்​.5) காலை 7 மணிக்கு கோயி​லில் இருந்து கிருஷ்ணர் புறப்​பா​டாகி, காலை 9 மணிக்கு சித்​திரை வீதி​களில் எண்​ணெய் விளை​யாட்டு கண்​டருளி, மீண்​டும் கிருஷ்ணன் சந்​நிதி வந்து சேர்​கிறார்.

பிற்​பகல் 3 மணிக்கு நம்​பெரு​மாள் உபய​நாச்​சி​யார்​களு​டன் திருச்​சிவி​கை​யில் புறப்​படும்​போது, அவருடன் கிருஷ்ணர் புறப்​பாடு கண்​டருள்​கிறார். மாலை 4 மணிக்கு யாதவ உறியடி ஆஸ்​தான மண்​டபம் சேரும் நம்​பெரு​மாள், கிருஷ்ணர் இரவு 7 மணிக்கு மண்​டத்​தில் இருந்து புறப்​படு​கின்​றனர்.

சித்​திரை வீதி​கள் வலம் வந்து இரவு 8.15 மணிக்கு பாதாள கிருஷ்ணன் சந்​நிதி அருகே உறியடி உற்​சவம் கண்​டருள்​கின்​றனர். பின்னர் இரவு 9 மணிக்கு மூலஸ்​தானம் சென்​றடைகின்​றனர். விழா ஏற்​பாடு​களை கோயில் இணை ஆணை​யர் சிவ​ராம்​கு​மார் மற்​றும் கோயில் பணி​யாளர்​கள் செய்​து வரு​கின்​றனர்​.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா: நம்பெருமாள் புறப்பாடு
திருச்சூரில் கார் விபத்து: தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in