அண்ணாமலையார் கோயிலில் இன்று தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அண்ணாமலையார் கோயிலில் இன்று தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Updated on
1 min read

திரு​வண்​ணா​மலை: திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயி​லில் கார்த்​திகை தீபத் திரு​விழா இன்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது.

இதையொட்​டி, இன்று அதி​காலை கோயில் நடை திறக்​கப்​பட்​டு, சுவாமிக்​குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடை​பெறுகிறது. தொடர்ந்​து, அண்​ணா​மலை​யார் சந்​நிதி எதிரே​யுள்ள தங்​கக் கொடிமரத்​தில் சிவாச்​சா​ரி​யார்​கள் வேதமந்​திரங்​கள் முழங்​கக் கொடியேற்றி வைக்​கின்​றனர்.

அப்​போது, பஞ்​சமூர்த்​தி​கள் சிறப்பு அலங்​காரத்​தில் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள்​பாலிக்​கின்​றனர். பின்​னர், பஞ்​சமூர்த்​தி​கள் வெள்ளி விமானங்​களில் வீதி​யுலா, இரவு வெள்ளி அதி​கார நந்தி வாக​னத்​தில் அண்​ணா​மலை​யார், உண்​ணா​முலை​யம்​மன் வீதி​யுலா நடை​பெறுகிறது. டிச. 3-ம் தேதி அதி​காலை பரணி தீப​மும், மாலை மகா தீப​மும் ஏற்​றப்பட உள்​ளது.

அண்ணாமலையார் கோயிலில் இன்று தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஏஐ விஷயத்தில் இறுதி முடிவை மனிதர்களே எடுக்க வேண்டும்: ஜி 20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in