திருத்தணி, வடபழனி, குன்றத்தூர், திருப்போரூர், வல்லக்கோட்டை உள்ளிட்ட முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

நவ.15-ல் சூரசம்ஹாரம், 16-ல் திருக்கல்யாணம்
திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது | சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது | சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

Updated on:
2 min read

சென்னை / திருப்போரூர்: கந்​தசஷ்டி விழா சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் நேற்று தொடங்​கியது. ஏராளமான பக்​தர்​கள் 6 நாள் விரதத்​தைத் தொடங்​கினர்.

வடபழனி முருகன் கோயி​லில் மகா கந்​தசஷ்டி விழா கடந்த 9-ம் தேதி மாலை வரசித்தி விநாயகர் புறப்​பாட்​டுடன் தொடங்​கியது. முதல் நாள் நிகழ்​வான லட்​சார்ச்​சனை நேற்று காலை 8 மணிக்கு வேத மந்​திரங்​கள் முழங்க நடை​பெற்​றது.

இதை​யொட்டி, முருகப் பெரு​மானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்​காரம், தீபாராதனை நடை​பெற்​றது. தொடர்ந்து, சிவாச்​சா​ரியார்​கள், அர்ச்​சகர்​கள் முருகப் பெரு​மானின் திருநாமங்​கள், மந்​திரங்​களை முழங்கி மலர்​களால் அர்ச்​சனை செய்​தனர். நிறைவாக தீபாராதனை நடை​பெற்று பக்​தர்​களுக்​குப் பிரசாதம் வழங்​கப்​பட்​டது.

குடும்ப நலன், குழந்​தைகளின் கல்வி, திரு​மணம், தொழில் முன்​னேற்​றம், உடல்​நலம் உள்​ளிட்ட வேண்​டுதல்​களை முன்​வைத்து ஏராளமான பக்​தர்​கள் ரூ.250 கட்​ட​ணச் சீட்டு பெற்று, தங்​களது பெயர், நட்​சத்​திரம், ராசி உள்​ளிட்ட விவரங்​களை வழங்கி அர்ச்​சனை​யில் பங்​கேற்​றனர்.

இரவு 8 மணிக்கு மங்​களகிரி விமானத்​தில் பாலசுப்​பிரமணிய சுவாமி புறப்​பாடு நடை​பெற்​றது. இன்று (நவ.11) சந்​திரபிரபை, நாளை (நவ.12) ஆட்​டுக்​கிடா, 13-ம் தேதி நாக வாக​னம், 14-ம் தேதி மங்​களகிரி விமானம் ஆகிய வாக​னங்​களில் பாலசுப்​பிரமணிய சுவாமி வீதி உலா வரு​கிறார்.

கந்​தசஷ்டி விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் 15-ம் தேதி இரவு 8 மணிக்கு நடை​பெற உள்​ளது. அதைத் தொடர்ந்து, சண்​முகப் பெரு​மான் மயில் வாக​னத்​தில் புறப்​பாடாகி பக்​தர்​களுக்கு அருள்​பாலிக்​கிறார். 16-ம் தேதி இரவு 7 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத சுப்​பிரமணிய சுவாமிக்கு திருக்​கல்​யாண உற்​சவம் நடை​பெற உள்​ளது.

விழாவையொட்டி நடை​பெற்று வரும் யாகசாலை பூஜைகள் 15-ம் தேதி உச்​சிக்​கால பூர்​ணா ஹுதி​யுடன் நிறைவடைகின்​றன. பல்​வேறு சிறப்பு வைபவங்​களு​டன் தொடர்ந்து நடை​பெறும் கந்​தசஷ்டி விழா 20-ம் தேதி அருணகி​ரிநாதர் புறப்​பாட்​டுடன் நிறைவடைகிறது.

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, வடபழனி முருகன் கோயிலில் லட்சார்ச்சனை நடைபெற்றது.

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, வடபழனி முருகன் கோயிலில் லட்சார்ச்சனை நடைபெற்றது.

மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில், பெசன்ட் ​நகர் அறு​படைவீடு முரு​கன் கோயில், கந்​தக்​கோட்​டம், மாடம்​பாக்​கம் தேனுபுரீஸ்​வரர், குமரக்​கோட்​டம், குன்​றத்​தூர், குமரன்​ குன்​றம், சிறு​வாபுரி, வல்​லக்​கோட்டை உட்​பட சென்னை மற்​றும் புறநகர் பகுதி​களில் உள்ள அனைத்து முரு​கன் கோயில்​களி​லும் கந்த சஷ்டி விழா விமரிசையாக நடை​பெற்று வரு​கிறது.

திருப்​போரூர் கந்​தசாமி கோயில்

புகழ்​பெற்ற முருகன் கோயில்​களுள் ஒன்​றான திருப்​போரூர் கந்​தசாமி கோயி​லில் ஆண்​டுதோறும் ஐப்​பசி மாதத்​தில் கந்​தசஷ்டி விழாசிறப்​பாகக் கொண்​டாடப்​படு​கிறது. இந்த ஆண்​டுக்​கான விழா நேற்று தொடங்​கியது. காலை 5.30 மணிக்கு சிவாச்​சா​ரியார்​கள் வேத மந்​திரங்​களை முழங்க, கோயில் முன்​புள்ள கொடிமரத்​தில் கொடியேற்​றினர்.

இதையடுத்து பக்​தர்​கள் அரோகரா கோஷம் எழுப்​பியபடி கொடிமரத்​தைச் சுற்றி வந்து 6 நாள் விரதத்​தைத் தொடங்​கினர். விழாவை ஒட்டி தினமும் இரவு முருகப்​பெரு​மான் பல்​வேறு வாக​னங்​களில் எழுந்​தருளி வீதி உலா வரு​கிறார்.

கந்தசஷ்டி விழாவை ஒட்டி சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த திருப்போரூர் முருகப்பெருமான்.

கந்தசஷ்டி விழாவை ஒட்டி சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த திருப்போரூர் முருகப்பெருமான்.

நேற்று கிளி வாக​னத்​திலும், இன்று (நவ.11) ஆட்​டுக்​கிடா வாக​னத்​திலும், 12-ம் தேதி புருஷா மிருகவாக​னத்​திலும், 13-ம் தேதி பூத வாக​னத்​திலும், 14-ம் தேதி வெள்ளி அன்னவாக​னத்​திலும் வீதி உலா நடை​பெறுகிறது. விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் நவ.15-ம் தேதி ஞாயிற்​றுக்​கிழமை மாலை 6 மணிக்கு நடை​பெறும்.

அப்​போது வெள்​ளிக் குதிரைவாக​னத்​தில் எழுந்​தருளும் முருகப்​பெரு​மான், தங்க வேல் கொண்டு சூரபத்​மனை வதம் செய்​கிறார். தொடர்ந்து இரவு தங்க மயில் வாக​னத்​தில் முருகப்​பெரு​மான் வீதி உலாநடை​பெறும்.

மறுநாள் 16-ம் தேதி திங்​கள்​கிழமை மாலை 6 மணிக்கு முருகப்​பெரு​மான் திருக்​கல்​யாண உற்​சவ​மும், யானை வாக​னத்​தில் வீதி உலா​வும் நடை​பெறுகின்​றன. கந்​தசஷ்டி விழாவையொட்டி கோயி​லில் தினமும் லட்​சார்ச்​சனை நடை​பெறுகிறது.

இதற்கு கட்​ட​ண​மாக ரூ.250 வசூலிக்​கப்​படு​கிறது. விழா ஏற்​பாடுகளை இந்து சமய அறநிலை​யத் துறை உதவி ஆணை​யர் ராஜலட்​சுமி, செயல் அலு​வலர் மாதவன் ஆகியோர் தலை​மையி​லான குழு​வினர் செய்து வரு​கின்​றனர்.

திருத்​தணி, சிறு​வாபுரி

அறு​படை வீடுகளில் ஒன்​றான திருத்​தணி சுப்​பிரமணிய சுவாமி கோயி​லிலும் கந்​தசஷ்டி விழா கோலாகலமாக தொடங்​கி​யுள்​ளது. விழாவையொட்டி தினமும் லட்​சார்ச்​சனை நடை​பெறவுள்​ளது. வரும் 15-ம் தேதி மாலை முருகப்​பெரு​மானுக்கு புஷ்​பாஞ்​சலியும், 16-ம் தேதி காலை 10 மணிக்கு திருக்​கல்​யாண உற்​சவ​மும் நடை​பெறும்.

இதேபோல சிறு​வாபுரி பாலசுப்​பிரமணிய சுவாமி கோயில், ஆண்​டார்​குப்​பம் பாலசுப்​பிரமணிய சுவாமி கோயில் ஆகிய​வற்​றி​லும் கந்​தசஷ்டி விழா தொடங்​கியது. ஏராளமான பக்​தர்​கள் கோயிலுக்கு வந்து சுவாமியை வணங்​கிச் சென்​றனர்.

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது | சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய ஒப்பந்தம்: 2 ஆண்டுக்கான டெண்டர் அறிவிப்பு

X