

காஞ்சிபுரம் ஹஜ்ரத் சையத் ஹாஜ் ஹமீது அவுலியா பாதுஷா தர்காவில் நடைபெற்ற சந்தனக் கூடு திருவிழா.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஹஜ்ரத் சையத் ஹாஜ் ஹமீது அவுலியா பாதுஷா தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு உருஷ் உற்சவ விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தர்காவில் திருக்குர்ஆன் ஓதுதல் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் தினசரி நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு உற்சவம் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சுமார் 640 ஆண்டுகளுக்கு முன்பு சமாதியடைந்து, இன்றுவரை அனைத்து மக்களுக்கும் அருளாசி வழங்கி வரும் ஞானியின் சமாதிக்கு, சிறப்பு வண்ண வாசனை மலர்கள் மற்றும் சந்தனம் பூசிப் பிரம்மாண்ட அலங்காரம் செய்யப்பட்டது.
இந்த விழாவில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தர்காவில் தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளைத் தர்காவின் தர்மகத்தா எம்.முகம்மது இம்தியாஸ், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.