திருமலையில் இலவச திருமணங்கள் - பக்தர்களிடையே சிறப்பான வரவேற்பு

திருமலையில் இலவச திருமணங்கள் - பக்தர்களிடையே சிறப்பான வரவேற்பு
Updated on
1 min read

திருமலை: ​திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் சார்​பில் கடந்த 2016ம் ஆண்டு ஏப்​ரல் 25ம் தேதி இலவச திருமண திட்​டம் தொடங்​கப்​பட்​டது. இதில் பங்​கேற்​கும் மணமக்​களுக்கு புரோகிதர் பங்கேற்று அவர​வர் மரபுப்​படி திரு​மணத்தை இலவச​மாக செய்து வைக்​கிறார். இதற்​கான மங்​கள வாத்​திய கலைஞர்​களும் இலவச​மாக பங்​கேற்​கிறார்​கள்.

தேவஸ்​தானம் சார்​பில் திரு​மலை​யில் உள்ள ‘கல்​யாண வேதி​கா’ எனும் இடத்​தில் இந்த இலவச திரு​மணங்​கள் நடத்தி வைக்​கப்​படு​கின்​றன. திரு​மணத்​தின் போது மஞ்​சள், குங்​குமம், கங்​க​னங்​கள் வழங்​கப்​படு​கிறது. திரு​மணத்​திற்கு தேவை​யான மாலை, கூறை புட​வை, வேட்டி போன்​றவை மட்​டும் திருமண வீட்​டார் கொண்டு வந்​தால் போது​மானது. மிக​வும் எளிமை​யான முறை​யில் இந்த திரு​மணம் நடத்தி வைக்​கப்​படு​கிறது.

திரு​மணம் முடிந்த கையோடு, ரூ. 300 சிறப்பு தரிசனம் வாயி​லாக (இது​வும் இலவச​மாக) புதுமண தம்​ப​தி​யினர் மற்​றும் இவர்​களின் பெற்​றோர் என மொத்​தம் 6 பேருக்கு சுவாமியை தரிசிக்​கும் வாய்ப்​பை​யும் திருப்​பதி தேவஸ்​தானம் ஏற்​படுத்தி கொடுக்​கிறது. அதன் பின்​னர் அனை​வருக்​கும் லட்டு பிர​சாத​மும் இலவச​மாக வழங்​கப்​படு​கிறது.

2016-ல் தொடங்கி கடந்த 2025 டிசம்​பர் மாதம் இறுதி வரை மொத்​தம் 26,777 திரு​மணங்​கள் நடத்தி வைக்​கப்​பட்​டுள்​ளன. கண்​டிப்​பாக இரு வீட்​டாரும் இந்​துக்​களாக இருக்க வேண்​டும். அது​வும் இது முதல் திரு​மண​மாக மட்​டுமே இருத்​தல் அவசி​யம். மணமகளுக்கு வயது 18, மணமக​னுக்கு வயது 21 நிரம்பி இருத்தலும் அவசி​யம்.

இந்த திரு​மணத்துக்கு தேவஸ்​தானத்​தின் இணை​யதளத்தில் ஆன்லைன் மூல​மாக​வும் முன்பதிவு செய்து கொள்​ளலாம். திருமணம் முடிந்த பின்​னர், இது சட்​டப்​படி பத்​திரப்​ப​தி​வும் செய்யப்​படு​கிறது. ஏழு​மலை​யான் குடி​கொண்​டிருக்​கும் திருமலை​யில் ஏழை, பணக்​காரர்​கள் என்​கிற பாகு​பாடு இன்றி பலர் திரு​மணம் செய்​து கொள்​வதை ஒரு பாக்​கிய​மாகவே கருதுகின்​றனர்​.

திருமலையில் இலவச திருமணங்கள் - பக்தர்களிடையே சிறப்பான வரவேற்பு
பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in