சோலைமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்: ஆறாம் படை வீட்டில் கோலாகலம்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
அழகர்கோவில் மலை்யில் உள்ள சோலைமலை முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள். (உள்படம்) கோபுரக் கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றும் சிவாச்சாரியார்கள். படங்கள்: நா. தங்கரத்தினம்

அழகர்கோவில் மலை்யில் உள்ள சோலைமலை முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள். (உள்படம்) கோபுரக் கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றும் சிவாச்சாரியார்கள். படங்கள்: நா. தங்கரத்தினம்

Updated on
1 min read

மதுரை: மதுரை அழகர்​கோ​வில் மலை மீதுள்ள சோலைமலை முரு​கன் கோயி​லில் (பழ​மு​திர் சோலை) நேற்று அதி​காலை 5.55 மணி​யள​வில் கும்​பாபிஷேகம் கோலாகல​மாக நடை​பெற்​றது. இதில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்று ‘அரோக​ரா’ ‘அரோக​ரா’ முழக்​கமிட்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

ஆறாவது படை வீடு எனும் பெருமை கொண்​டது சோலைமலை முரு​கன் கோயில். இக்​கோயி​லில் கடந்த 2014-ம் ஆண்​டில் கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது. ஆகம விதிப்​படி 12 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை கும்​பாபிஷேகம் நடத்த வேண்​டும் என்​ப​தால் உபய​தா​ரர்​கள் மூலம் திருப்​பணி​கள் நடந்து வந்​தன. அதைத்​தொடர்ந்து ஜூலை 1-ம் தேதி காலை​யில் மங்கள இசை, வேத​பா​ராயணம், திரு​முறை பாராயணத்​துடன் கும்​பாபிஷேக விழா தொடங்​கியது. ஜூலை 2-ம் தேதி காலை முதல்​கால யாக வேள்​வி, ஜூன் 3-ம் தேதி காலை இரண்​டாம் கால யாக வேள்​வி, அன்று மாலை மூன்​றாம் கால யாக வேள்​வி, ஜூலை 4-ம் தேதி நான்​காம் காலமற்றும் ஐந்​தாம் கால யாக வேள்வி பூஜை நடந்​தது.

நேற்று அதி​காலை 4 மணி​யள​வில் ஆறாம்​கால யாக வேள்வி நடந்​தது. பின்​னர் 5.15 மணி​யள​வில் யாக குண்​டங்​களில் இருந்து கலசங்​கள் புறப்​பாடு நடை​பெற்​றது. வித்தக விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்​பிரமணி​யர், ஆதிவேல் சுவாமி விமானங்​கள், ராஜகோபுரம் ஆகிய​வற்​றுக்கு அதி​காலை 5.55 மணி​யள​வில் ஒரே நேரத்​தில் சிவாச்​சா​ரி​யார்​கள் புனித நீர் ஊற்றி கும்​பாபிஷேகம் செய்​தனர். அப்​போது பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் ‘அரோக​ரா’, ‘அரோக​ரா’ என பக்​திப் பரவசத்​துடன் முழக்​கமிட்​டனர்.

விழா​வில் அமைச்​சர் நிர்​மல்​கு​மார், ஆட்​சி​யர் நிஷாந்த் கிருஷ்ணா மற்​றும் இந்​து சமய அறநிலை​யத்​ துறை அதி​காரி​கள் பங்​கேற்​றனர். கோயில் இணை ஆணை​யர் ரா.ஹரிஹரன் தலை​மை​யில் கோயில் பணி​யாளர்​கள் விழா ஏற்​பாடு​களை செய்​திருந்​தனர். காவல் கண்​காணிப்​பாளர் தேவ​நாதன் தலை​மை​யில் 1000 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். கும்​பாபிஷேகத்​தையொட்டி அழகர் மலைப் பாதை முழு​வதும் வண்ண விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்​டிருந்​தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in