திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கொடி மரத்துக்கு நடைபெற்ற மகா தீபாராதனை.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கொடி மரத்துக்கு நடைபெற்ற மகா தீபாராதனை.

Updated on
1 min read

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஆவணித் திரு​விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

அதி​காலை 1 மணிக்கு நடை​திறக்​கப்​பட்​டு, 1.30 மணிக்கு விஸ்​வரூப தீபா​ராதனை, அதி​காலை 2 மணிக்கு உதய மார்த்​தாண்ட அபிஷேகம் நடை​பெற்​றது. 3 மணிக்கு வெள்ளிப் பல்​லக்​கில் கொடிப்​பட்​டம் 9 சந்தி வழி​யாக கொண்​டு​வரப்​பட்​டது.

தொடர்ந்து கோயில் இரண்​டாம் பிர​காரத்​தில் உள்ள செப்புக்கொடிமரத்​தில் பஞ்​ச​வாத்​தி​யங்​கள் முழங்க, அதி​காலை 5.20 மணிக்கு சிவாச்​சா​ரி​யார் கொடி ஏற்​றி​னார். அப்​போது ‘வெற்​றிவேல் முரு​க​னுக்கு அரோக​ரா’ என்று பக்​தர்​கள் முழங்​கினர். தொடர்ந்​து, கொடி மரத்​துக்கு 16 வகை​யான அபிஷேகம் நடை​பெற்​றது. 6.35 மணிக்கு கொடி மரத்​துக்கு மகா தீபா​ராதனை நடந்​தது.

நிகழ்ச்​சி​யில் திரு​வாவடு​துறை ஆதீனம் திருவிடைமருதூர் திருச்​சிற்​றம்​பலம் தம்​பி​ரான் சுவாமிகள் உள்பட திரளானபக்​தர்​கள் கலந்து கொண்​டனர். மாலை 4.30 மணிக்கு அப்​பர்சுவாமிகள் தங்​கச் சப்​பரத்​தில் எழுந்​தருளி வீதி உலா வந்து உழவாரப்​பணி செய்து கோயில் சேர்ந்​தார். இரவு 7 மணிக்கு ஸ்ரீபலி நாயகர் அஸ்​திரதேவருடன் தந்த பல்​லக்​கில் கோயி​லில் இருந்து புறப்​பா​டாகி வீதி உலா வந்து கோயிலை சேர்ந்​தார். ஆவணித் திரு​விழா செப்​.11-ம் தேதி வரை நடை​பெறுகிறது. 9-ம் தேதி தேரோட்​டம் நடைபெறுகிறது.

<div class="paragraphs"><p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கொடி மரத்துக்கு நடைபெற்ற மகா தீபாராதனை.</p></div>
காஞ்சியில் செமிகண்டக்டர் உற்பத்தி பூங்கா, கோவையில் டிஜிட்டல் நிதி மையம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in