

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா திருவிழா கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டின் ஆருத்ரா திருவிழா இன்று (வியாழக்கிழமை) இரவு ருத்ராட்ச மண்டபத்தில் அமைந்துள்ள நடராஜருக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
ஆருத்ரா திருவிழாவை முன்னிட்டு இன்றிலிருந்து தினந்தோறும் மாணிக்க வாசகர் தங்க கேடயத்தில் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சியும், நடராஜருக்கு தினமும் சிறப்பு மகா தீப ஆராதனை பூஜையும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற டிசம்பர் 27-ம் தேதி அன்று அதிகாலை ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.