ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஆகஸ்ட் 14-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார்.

Updated on
1 min read

ஸ்ரீ வில்லிபுத்தூர்: ஸ்ரீ​வில்​லிபுத்​தூர் ஆண்​டாள் கோயில் ஆடிப்​பூர தேரோட்ட திரு​விழா நேற்று காலை கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

108 வைணவ திவ்ய தேசங்​களில் ஒன்​றான வில்​லிபுத்​தூர் ஆண்​டாள் கோயி​லில் தாயார் ஆண்​டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்​சத்​திரத்​தில் தேரோட்ட திரு​விழா வெகு​விமரிசை​யாக நடை​பெறு​வது வழக்​கம். இந்த ஆண்டு ஆடிப்​பூர தேரோட்ட திரு​விழாவுக்​காக மே 28-ம் தேதி முகூர்த்​தக்​கால் நடப்​பட்டு தேரை அலங்​கரிக்​கும் பணி​கள் தொடங்​கின.

நேற்று காலை கொடியேற்​றம் நடை​பெற்​றது. முன்​ன​தாக ஆண்​டாள்​-ரெங்​கமன்​னாருக்கு விசேஷ திரு​மஞ்​சனம் செய்​யப்​பட்​டு, சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. அதன்​பின் கருட கொடிப்​பட்​டம் மாட வீதி​கள் வழி​யாக ஊர்​வல​மாக எடுத்து வரப்​பட்​டு, கொடிமரத்​துக்கு அபிஷேகம் செய்​யப்​பட்​டது. காலை 9.30 முதல் 10.30 மணிக்​குள் கொடியேற்​றப்​பட்​டு, தீபா​ராதனை நடை​பெற்​றது.

ஆகஸ்ட் 10-ம் தேதி பெரி​யாழ்​வார் மங்​களா​சாசனம் மற்​றும் 5 கருட சேவை​யும், 12-ம் தேதி சயன சேவை​யும் நடை​பெறுகிறது. 14-ம் தேதி ஆடிப்​பூரம் அன்று காலை 9.05 மணிக்கு முக்​கிய நிகழ்​வான ஆடிப்​பூர தேரோட்​டம் நடை​பெறுகிறது. செயல் அலு​வலர் சர்க்​கரை​யம்​மாள் மற்​றும் அறநிலை​யத் துறை அதி​காரி​கள் ஏற்​பாடு​களை செய்து வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார்.</p></div>
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in