சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் இன்று ஆடி அமாவாசை திருவிழா தொடக்கம்

பக்​தர்​கள் குடிநீர் எடுத்​துவர அறி​வுறுத்​தல்
சதுரகிரி மலைப்பாதையில் வறண்டு காணப்படும் ஓடை.

சதுரகிரி மலைப்பாதையில் வறண்டு காணப்படும் ஓடை.

Updated on
1 min read

வத்​தி​ரா​யிருப்பு: சதுரகிரி ஆடி அமா​வாசை திரு​விழா இன்று தொடங்​கு​கிறது. மலைப்​பாதை​யில் உள்ள ஓடைகள் வறண்​டுள்​ள​தால் கோயிலுக்கு வரும் பக்​தர்​கள் தேவை​யான அளவு குடிநீர் எடுத்​துவர அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளனர்.

சதுரகிரி சுந்தர மகாலிங்​கம் கோயி​லில் பிரசித்தி பெற்ற ஆடி அமா​வாசை திரு​விழா ஆக.10 முதல் 13-ம் தேதி வரைநடை ​பெறுகிறது. பக்​தர்​களுக்​காக மலைப்​பாதை​யில் 5 இடங்​களில் நிரந்தர குடிநீர் தொட்​டிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. ஆடி அமா​வாசைக்​காக கூடு​தலாக 5 இடங்​களில் தற்​காலிக குடிநீர் வசதி ஏற்​படுத்​தப்​பட்டு உள்​ளன.

கோடை வெயி​லின் தாக்​கம் அதி​கரிப்பு மற்​றும் மழை இல்​லாத​தால், சதுரகிரி மலைப்​பாதை​யில் உள்ள ஓடைகள் நீரின்றி வறண்​டுள்​ளன. தற்​காலிக குடிநீர் தொட்​டி, குடிநீர் பாட்​டில்​கள் வசதி ஏற்​படுத்​தப்​பட்​டிருந்​தா​லும், ஆடி அமா​வாசை திரு​விழாவுக்கு 1 லட்​சத்​துக்​கும் அதி​க​மானோர் வரு​வார்​கள் என்​ப​தால் பக்​தர்​கள் தேவை​யான குடிநீரை உடன் எடுத்து வர அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

மேலும், மலை​யில் குளிக்க நீர் இருக்​காது என்​ப​தால் பக்தர்கள் அடி​வாரத்​திலேயே குளித்​து​விட​வும் வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது. சதுரகிரி செல்​லும் பக்​தர்​கள் பாது​காப்​பான தாணிப்​பாறை பாதையைப் பயன்​படுத்​த​வும், ஒரு​வர் பின் ஒரு​வ​ராக இறங்​குபவர்​களுக்கு வழி​விட்டு மலை​யேற​வும், உடல்​சோர்வு ஏற்​பட்​டால் ஓய்​வெடுத்து விட்​டு, மலை​யேற​வும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

மேலும், வயதானோர், கர்ப்​பிணி​கள், குழந்​தைகள், இதயக் குறை​பாடு மற்​றும் சுவாசப் பிரச்​சினை உள்​ளோர், உடல் நலக்​குறைவு உள்​ளோர் மலை​யேறு​வதை தவிர்க்க வேண்​டும் என மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்​வாகங்​கள் சார்​பில் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளன.

ஆடி அமா​வாசை திரு​விழாவுக்கு அனு​ம​திக்​கப்​பட்ட ஆக.10 முதல் 13-ம் தேதி வரை 4 நாட்​களும் காலை 6 மணி முதல் நண்​பகல் 12 மணி வரை மட்​டுமே பக்​தர்​கள் மலை​யேற அனு​ம​திக்​கப்​படு​வர் என வனத்​துறை சார்​பில் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. கோயில் நிர்​வாகம் சார்​பில் மலை​யேறும் பக்​தர்​களுக்​காக 1 லிட்​டர் குடிநீர் பாட்​டில்​கள் ஒரு லட்​சம் என்ற எண்​ணிக்​கை​யில் மலை​யடி​வாரத்​தில்​ வைக்​கப்​பட்​டுள்​ளன.

<div class="paragraphs"><p>சதுரகிரி மலைப்பாதையில் வறண்டு காணப்படும் ஓடை. </p></div>
“விஜய் வரும் காலத்தில் பிரதமர் ஆவார் என மக்கள் நினைக்கின்றனர்” - தவெக எம்எல்ஏக்கள் பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in