‘ஆச்சாரியரின் அழைப்பு - சென்னை சொற்பொழிவுகள்’ ஆங்கில நூலின் மறுபதிப்பை சங்கர மடத்தின் பீடாதிபதிகள் வெளியிட்டனர்

காஞ்சி மகாஸ்வாமி வழங்கிய அனுக்கிரகபாஷணத்தின் தொகுப்பு
ஆச்சாரியரின் அழைப்பு - சென்னை சொற்பொழிவுகள் ஆங்கில நூலின் மறுபதிப்பை, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று காஞ்சி சங்கர மடத்தில் வெளியிட்டனர்.

ஆச்சாரியரின் அழைப்பு - சென்னை சொற்பொழிவுகள் ஆங்கில நூலின் மறுபதிப்பை, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று காஞ்சி சங்கர மடத்தில் வெளியிட்டனர்.

Updated on
1 min read

சென்னை: ​காஞ்சி மகாஸ்​வாமி ஸ்ரீ சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி சுவாமிகளின் அனுக்​கிரக​பாஷணத்தை தொகுத்து 1964-ம் ஆண்டு வெளி​யிடப்​பட்ட ஆங்​கில நூலின் மறு​ப​திப்​பை, காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திப​தி​கள் ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி சுவாமிகள் நேற்று காஞ்சி சங்கர மடத்​தில் வெளி​யிட்​டனர்.

காஞ்சி மகாஸ்​வாமி ஸ்ரீ சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், 1957-58-ம் ஆண்​டு​களில் சென்னை சம்​ஸ்​கிருத கல்​லூரி​யில் தங்​கி​யிருந்​த​போது, இந்து தர்​மம், வேத, சாஸ்​திர, புராணங்​கள், தத்​து​வம் உள்​ளிட்​டவை தொடர்​பாக பல்​வேறு தலைப்​பு​களில் அனுக்​கிரக​பாஷணம் வழங்​கி​னார். இந்த உபதேச மொழிகள் ‘தி இந்​து’ துணை தலைமை செய்​தி​யாளர் வி.​ராமகிருஷ்ண​னால் பதிவு செய்​யப்​பட்​டு, பத்​திரி​கை​யில் வெளி​யாகின.

மகாஸ்​வாமி​யின் 75-வது ஜெயந்​தி: ‘தி இந்​து’ குழு​மத்​தினர் அளித்த ஊக்​கத்​தின்​பேரில், மகாஸ்​வாமி 1957-1960-ம் ஆண்​டு​களில் வழங்​கிய அனுக்​கிரக​பாஷணம் அனைத்​தும் சம்​ஸ்​கிருத மேற்​கோள்​களு​டன் தொகுக்​கப்​பட்​டு, மகாஸ்​வாமி​யின் 75-வது ஜெயந்​தியை முன்​னிட்டு 1964-ம் ஆண்டு ‘ஆச்​சா​ரியரின் அழைப்​பு’ என்று தலைப்​பில் நூலாக (2 தொகு​தி​கள்) வெளி​யிடப்​பட்​டது. பின்​னர், இந்​நூல் 1995, 2022-ம் ஆண்​டு​களில் மறு​ப​திப்பு செய்​யப்​பட்​டது. வாசகர்​களுக்கு எளி​தாகப் புரி​யும் வகை​யில் இந்​நூல் பொருள்​வாரி​யாக மறு​வகைப்​படுத்​தப்​பட்டு மறுசீரமைக்​கப்​பட்​டுள்​ளது.

காஞ்சி சங்கர மடத்​தில் நடை​பெற்று வரும் யுகா​தி, ஸ்ரீ ராம நவமி மகோற்​சவத்​தில், ஸ்ரீ மகாபெரியவா பிருந்​தாவனத்​தில்,இந்த ஆங்​கில நூலின் மறு​ப​திப்​பை, காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திப​தி​கள் ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், ஸ்ரீசத்ய சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி சுவாமிகள் நேற்று வெளி​யிட்​டனர். இந்​நூலின் முதல் பிர​தியை தி இந்து குழும பதிப்பக நிறு​வனத்​தின் தலை​வர் நிர்​மலா லஷ்மண் பெற்​றுக் கொண்​டார்.

நிகழ்ச்​சி​யில் மயி​லாப்​பூர் வேத அத்​யயன சபையைச் சேர்ந்​தவர்​கள், தி இந்து குழும அலு​வலர்​கள் பங்​கேற்​றனர். ரூ.400 விலை கொண்ட இந்​நூலை (இரு தொகு​தி​கள்) https://publications.thehindugroup.com/bookstore/ ஆன்​லைன்​ இணைப்​பு மூலம்​ பெறலாம்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in