

ஜோதிடத்தில் கால புருஷ சக்கரத்தை பிரதானமாக கொண்டு பலன் கூறப்படுகிறது. கால புருஷ சக்கரம் பன்னிரண்டு ராசிகளை உள்ளடக்கியது.
கால புருஷ சக்கரத்தில் லக்கினம் ஆதாவது தலை என்பது மேஷ ராசியாகும். அதன் பாதம் என்பது மீனம் எனும் ராசியாகும். லக்கனம் எனும் தலைக்கு ஆறாவது இடமாக வருவது கன்னி ராசியாகும். கன்னி ராசியை ஆங்கிலத்தில் virgo என்று அழைப்பர். ஆற்றங்கரையில் ஒரு பூவுடன் அமர்ந்திருக்கும் வடிவம் கொண்டது கன்னி ராசி. கன்னி என்ற ராசியின் அதிபதி புதன் ஆகும். புதன் ஒரு திருநங்கை கிரகம். ஆணும் பெண்ணும் கலந்த வடிவம். கன்னி என்ற பெயரே சொல்லும் முறையான காமம் குறைந்த ராசி என்று.
கன்னியில் காமக்காரகன் சுக்கிரன் நீச்சம் பெறும். அதுவும் சூரியன் தெற்கு நோக்கி பிரயாணம் செய்யும் தட்சிணாயண காலத்தில், சுக்ல பட்சம் எனும் வளர்பிறையில், அஸ்தம் என்ற பெண் கிரகம் (சக்தி வடிவான) சந்திரனை அதிபதியாக கொண்ட நட்சத்திரத்தில், முதல் ஒன்பது பாகையில் சுக்கிரன் பரம நீச்சம் பெறும்.
அந்த ஒன்பது பாகைகளில் ஒவ்வொரு நாளாக சூரியன் செல்லும்போது, ஒவ்வொரு தேவியருக்கான வழிபாடு நடைபெறும். நன்றாக கவனித்தால் இந்த நவராத்திரி பண்டிகைகளில் சுக்கிர காரகத்துவம் அதிகமாக உபயோகிப்பது தெரியும்.
உதாரணமாக வண்ணவண்ண பொம்மைகள், பாடல்கள், வளையல்கள், நறுமணப்பூக்கள், சுமங்கலிகளுக்கு சிறப்பான வரவேற்பு என இருப்பதைக் காணலாம். இது கன்னியில் பலம் இழக்கும் நீச்ச சுக்கிர காரகத்தை பலப்படுத்தவே ஆகும்.
கன்னி ராசியில் புதன் உத்சம பெரும். புதனின் அதிபதி விஷ்ணு அல்லது பெருமாள். சுக்கிர புதன் சேர்க்கை காரகத்துவமான பாடல் பாடுவதும் நீச்ச சுக்கிரனை பலப்படுத்தவே. எனவே விதவிதமான கொலு பொம்மைகளை வைத்து பாடல் பாடுவது கட்டாயமாகும். இங்கே பாடல் என்பது சுக்கிரன் புதன் சேர்க்கையை குறிக்கும். நீச்சம் பெறும் சுக்கிரனை, பாடல் மற்றும் ஆன்மீக சொற்பொழிவு எனும் புதனின் காரகத்துவதால் பலம் பெற செய்வதும் இந்த நவராத்திரி கொலு வழிபாட்டின் நோக்கம்
மேலும் கன்னியில் நீச்ச சுக்கிரனுக்கு உச்ச புதன் நீச்சபங்கம் தரும். இங்கே சுக்கிரனை பலப்படுத்த, புதன் அதிபதியான பெருமாள் அல்லது விஷ்ணு வழிபாடும் விரத முறையும் புரட்டாசியிலுண்டு.