

மதுரை: கள்ளழகர் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகருடன் வந்த 39 தள்ளு உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.1 கோடியே 2 லட்சத்து 12 ஆயிரத்து 952 ரொக்கப் பணம், தங்க நகைகள் 15 கிராம் மற்றும் வெள்ளி 63 கிராம் கிடைக்கப் பெற்றன.
கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா மே 1 தொடங்கி மே 10ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டபோது அவருடன் 39 தற்காலிக தள்ளு உண்டியல்களில் வந்தன. இதில் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். இந்த உண்டியல்கள் எண்ணும் பணி இன்று கள்ளழகர் கோயில் வளாகத்தில் துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் நடைபெற்றது.
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி ஆணையர் கருணாகரன், வடக்கு மண்டல ஆய்வர் கர்ணன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் கோயில் பணியாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில் ரூ. 1 கோடியே 02 லட்சத்து 12 ஆயிரத்து 952 ரொக்கப் பணம், தங்க நகைகள் 15 கிராம், வெள்ளி 63 கிராம் கிடைக்கப்பெற்றன. இதில் கடந்தாண்டு ரூ.1 கோடியே 2 லட்சத்து 73 ஆயிரத்து 088 கிடைத்தன.