மதுரையில் 100 ஆண்டுகளுக்குப் பின் ஆயிரம் பொன் சப்பரத்தேரில் எழுந்தருளிய கள்ளழகர்

மதுரையில் 100 ஆண்டுகளுக்குப் பின் ஆயிரம் பொன் சப்பரத்தேரில் எழுந்தருளிய கள்ளழகர்
Updated on
1 min read

மதுரை: நூறு ஆண்டுக்குப்பின் ஆயிரம் பொன் சப்பரத்தேரில் நேற்று கள்ளழகர் எழுந்தருளினார்.

கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்கு முன்னதாக ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருள்வார். கடந்த நூறு ஆண்டுகளாக ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளாமல் அது ஒரு சம்பிரதாயமாகவே மட்டுமே நடந்து வந்தது.

அதேபோல், கள்ளழகர் சித்திரைத் திருவிழாவானது முதலில் ஆயிரம் பொன் சப்பரத்தேர் முகூர்த்தக்கால் நடும் விழாவில் இருந்தே தொடங்குகிறது. தற்போது கோயில் நிர்வாகம் சார்பில் ரூ. 5 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு இந்தாண்டிலிருந்து சப்பரத்தேரில் எழுந்தருள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி நூறு ஆண்டுகளுக்குப்பின் கள்ளழகர் நேற்று ஆயிரம் பொன் சப்பரத் தேரில் எழுந்தருளினார். இவ்விழாவில், கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in