சித்திரைப் பெருவிழா: சுவாமிமலை கோயிலில் கொடியேற்றம்

சித்திரைப் பெருவிழா: சுவாமிமலை கோயிலில் கொடியேற்றம்
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரைப் பெருவிழாயொட்டி கொடியேற்றம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்துக்கு முன் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

விழாக் காலங்களில் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. பிரதான விழாவான வரும் மே 2-ம் தேதி தன்னைத் தானே பூஜித்தலும், மே 6-ம் தேதி திருத்தேரோட்டமும், 7-ம் தேதி நடராஜர்-சிவகாமியம்மாள் மாணிக்கவாசகர் தேர்க்கால் பார்த்தல், ஊடல், திருவீதியுலா மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

8-ம் தேதி சுவாமிகள் விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைத் துணை ஆணையர் தா.உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in