தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி சென்னை கோயில்களில் சிறப்பு வழிபாடு

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். | படங்கள்: ம.பிரபு |
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். | படங்கள்: ம.பிரபு |
Updated on
1 min read

சென்னை: தமிழ்ப் புத்தாண்டு தினத்தை ஒட்டி கோயில்களில் சிறப்புவழிபாடுகள் நடைபெற்றன. சித்திரை மாதப் பிறப்பான நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி சென்னையில் உள்ள பல்வேறு கோயில்களில் அபிஷேகம், அர்ச்சனை, சிறப்பு பூஜைகளுக்கும், பஞ்சாங்கம் வாசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில், சென்னை வடபழனி முருகன் கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து, காலசந்தி பூஜையும், காலை 8 மணிக்கு பாலாபிஷேகமும் நடைபெற்றது. இதையடுத்து, காலை 11 மணிக்குஉச்சிகால சிறப்பு பாலாபிஷேகமும், பின்னர் மூலவருக்கு ராஜ அலங்காரமும் நடந்தது.

இந்நிலையில், வடபழனி முருகன் கோயிலில், அதிகாலைமுதல் மதியம் 12.30 மணிக்குவரையிலும், மாலை 3 மணிமுதல் இரவு 9மணி வரையிலும்,பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி, சென்னை வடபழனி<br />முருகன் கோயிலில்உற்சவர் முருகன்<br />ராஜ அலங்காரத்தில்பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி, சென்னை வடபழனி
முருகன் கோயிலில்உற்சவர் முருகன்
ராஜ அலங்காரத்தில்பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதேபோல், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு அஷ்டலட்சுமி, நரசிம்மர், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

பஞ்சாங்கம் வாசிப்பு: காலை 8 மணிக்கு சிறப்புதிருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, சோபகிருது வருட பஞ்சாங்கம் வாசித்தல், சிறப்பு வழிபாடு, இரவு 9 மணிக்கு சயன பூஜை நடந்தது. காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு நடை திறக்கப்பட்டிருந்தது.

இதேபோல், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்,மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பாரிமுனை கற்பகாம்பாள் கோயில் உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகஅலங்காரம், பஞ்சாங்கம் வாசிப்பது ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in