

மதுரை: மதுரை அழகர்கோயில் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டு வருகிறது.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்கும் 10 ஆயிரம் பேருக்கு திருக்கல்யாண விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் அருகில் 2 கோயில் மண்டபங்கள் மற்றும் கோயில் வளாகத்திலுள்ள அன்னதான கூடம் ஆகிய 3 இடங்களில் விருந்து நடைபெறும். திருக்கல்யாண மண்டபம், 200 கிலோ அளவிலான பல வண்ண மலர்களாலும், விளக்குகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன.
திருக்கல்யாணத்தை பக்தர்கள் காணும் வகையில் திருக்கல்யாண மண்டபம் மற்றும் அதன் அருகில் தரை விரிப்புகள் அமைக்கப்பட்டு, பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், திருக்கல்யாண நிகழ்ச்சியை கோயில் யூடியூப் சேனலில் நேரலை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் திருக்கல்யாண மொய் செலுத்த 7 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொய் பணம் செலுத்தும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். திருக்கல்யாண மண்டபம் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன.