பங்குனி தேர்த் திருவிழா: கும்பகோணம் நாச்சியார் கோயிலில் கொடியேற்றம்

சிறப்பலங்காரத்தில் வஞ்சுளவல்லி தாயார், சமேத சீனிவாசப்பெருமாள்
சிறப்பலங்காரத்தில் வஞ்சுளவல்லி தாயார், சமேத சீனிவாசப்பெருமாள்
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணத்திலுள்ள நாச்சியார்கோயில் வஞ்சுளவல்லி தாயார், சமேத சீனிவாசப் பெருமாள் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழாவை யொட்டி கொடியேற்றம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி திருத்தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணி நடைபெற்று வரும் நிலையில் நிகழாண்டு இன்று கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடி மரத்தின் முன்பு வஞ்சுளவல்லி தாயார், சமேத சீனிவாசப் பெருமாள் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

தொடர்ந்து ஏப்ரல் 8-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் தாயார் பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான வரும் ஏப்ரல் 1-ம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல் 6.49 மணிக்குள் உள்பிரகார கல்கருட சேவையும், இரவு 9.30 மணிக்கு கல்கருட வாகனத்தில் பெருமாளும், அன்னப்பட்சி வாகனத்தில் வஞ்சுலவல்லித் தாயார் வீதியுலாவும், 6-ம் தேதி அதிகா 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் பெருமாள் தாயாருடன் கோ ரத புறப்பாடும்,மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் தக்கார் கோ. கிருஷ்ணகுமார், செயல் அலுவலர் பா.பிரபாகரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in