

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை புதன்கிழமை தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகையையொட்டி, உகாதி ஆஸ்தானம் கடைபிடிக்கப்படுகிறது.
இன்று செவ்வாய்க் கிழமை காலை கோயில் கர்ப்பகிரகம், உப சன்னதிகள், கொடிக்கம்பம், கொடிமரம், தங்க விமான கோபுரம் ஆகிய அனைத்து இடங்களிலும் பன்னீர், குங்குமம், மஞ்சள், பச்சை கற்பூரம் போன்றவை கலந்த வாசனை திரவியத்தால் சுத்தம் செய்யப்பட உள்ளது.
அதன் பிறகு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் மதியம் 12 மணிக்கு பின்னரே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். நாளை உகாதியையொட்டி, ஏழு மலையான் கோயில் முழுவதும் மலர்களாலும், விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.