Published : 20 Mar 2023 07:16 AM
Last Updated : 20 Mar 2023 07:16 AM
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வரும் 27-ம் தேதி பங்குனி பெருவிழா தொடங்குகிறது.இதையொட்டி பக்தர்கள் பாதுகாப்பு வசதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கோயிலில் நடைபெற்றது.
சிவன் கோயில்களில் மிகவும்பிரசித்தி பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். இங்குஆண்டுதோறும், பங்குனி மாதத்தில் நடக்கும் 10 நாள் பெருவிழாவிடையாற்றி கலை விழாவாக நடத்தப்படுகிறது. இந்த விழாவுக்குசென்னை மட்டுமின்றி, புறநகர், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்.
இந்நிலையில், மயிலாப்பூர்கபாலீஸ்வரர் கோயிலின் இந்தாண்டு பங்குனி மாதப் பெருவிழாவருகிற 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழா ஏப்ரல் மாதம் 7-ம் தேதி வரை10 நாட்கள் நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடு வசதிகள் குறித்த ஆய்வு கூட்டம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கோயில் செயல் அலுவலர் இரா.ஹரிஹரன், மயிலாப்பூர் காவல்துறை துணைஆணையர் ராஜ்வாத் சதுர்வேதி,அறங்காவலர்கள் ப.திருநாவுக்கரசு, சி.டி.ஆறுமுகம், எம்.பி.மருதமுத்து உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து காவல் துணை ஆணையர் ராஜ்வாத் சதுர்வேதி கூறுகையில், ``கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழா முக்கிய நிகழ்வான தேர் இழுக்கும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். அவர்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு அளிக்கவும் அதிகளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
ட்ரோன் மூலம் கண்காணிப்பு: மேலும், கூட்டத்தில் செயின் பறிப்பு உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 40-க்கும் மேற்பட்ட தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள், மாடவீதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. தடுப்புகள் அமைக்கப்பட்டு சோதனையில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், ட்ரோன் மூலமும், டிஜிட்டல் திரைகள் அமைத்து பக்தர்களை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் பங்குனிதிருவிழா 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT