Published : 28 Sep 2017 11:59 am

Updated : 28 Sep 2017 12:03 pm

 

Published : 28 Sep 2017 11:59 AM
Last Updated : 28 Sep 2017 12:03 PM

வார ராசிபலன் 28/09/2017 முதல் 04/10/2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

28-09-2017-04-10-2017

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய், சுக்கிரனுடன் சஞ்சாரம் செய்வதால் ப்ருகு மங்கள் யோகம் பெறுகிறீர்கள். எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். சொந்தக் காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினருடன் பழகும் போது கவனம் தேவை. தொழில் ஸ்தானத்தில் கேது உலா வருகிறார். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனத் தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது நிதானம் தேவை.

கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பாதிபதி சுக்கிரன் திரிகோணத்தில் சஞ்சாரம் செய்கிறார். குடும்பம் தொடர்பான கவலைகள் மறையும். குடும்பச் செலவைச் சமாளிக்கப் பணவரத்து இருக்கும். மனதில் ஆன்மிக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். பெண்களுக்கு அடுத்தவர்கள் செயல்கள் கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். கலைத்துறையினருக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்குள் கல்வியில் இருந்த போட்டி குறையும்.

 

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் எண்கள்: 3, 9

பரிகாரம்: தினமும் முருகன் ஆலயத்திற்குச் சென்று கந்த சஷ்டி கவசம் சொல்லி வர மனதில் அமைதி மேலோங்கும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் பஞ்சமபூர்வ புண்ணியஸ்தானத்திற்கு மாறுகிறார். நீண்ட நாட்களாகத் தடைபட்ட காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். கொள்கைக்காக நிற்பீர்கள். அதிகம் பேசுவதைத் தவிர்க்கவும். அடுத்தவர் சொல்வதை நம்புவதற்கு முன்னர் தீர்க்கமாக ஆலோசிக்கவும். தொழில் ஸ்தானத்தை செவ்வாய் - சுக்கிரன் - குரு பார்க்கிறார்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர் தேவை

 

அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அரசாங்கத்தின் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளைச் செய்து வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள், மேலதிகாரிகளால் நன்மையும் உண்டாகும். தம்பதிகளிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பெண்கள் அதிகம் பேசுவதைத் தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. கலைத்துறையினருக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வீண்பயம் ஏற்படும். அரசியல்வாதிகள் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட கவனத்துடன் படிப்பீர்கள். ஆசிரியர்கள், சக மாணவர்கள் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.

 

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 6, 9

பரிகாரம்: பெருமாள் ஆலயங்களில் இருக்கும் ஆண்டாளை வழிபட மனசஞ்சலம் நீங்கும். தொழில் மாற்றம் ஏற்படும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதன் மூலமும் குரு பார்வை மூலமும் அருமையான பலன்களைப் பெறப் போகிறீர்கள். கடிதப் போக்குவரத்து சாதகமான பலன் தரும். அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தை லாபகரமாகச் செய்வார்கள்.

பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு மனதில் இருந்து வந்த சஞ்சலம் நீங்கும். கலைத்துறையினருக்கு மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல்வாதிகள் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்குக் கல்வியில் வெற்றி பெறக் கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளைக் குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது.

 

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை, நீலம்

எண்கள்: 1, 5

பரிகாரம்: புதன்கிழமை அன்று ஐயப்பன் கோயிலுக்குப் போய் கருடாழ்வாரை வழிபட குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் உலவும் ராகுவால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாகச் செய்வீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. தைரியம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய், சுக்கிரனுடன் இணைந்து தனஸ்தானத்தை அலங்கரிக்கிறார். தொழில், வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரத்து இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நீண்ட நாட்களாகத் தொழிலில் இருந்து வந்த சுணக்கம் மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்துச் செய்வது நன்மை தரும்.

 

மேலதிகாரிகள் கூறுவதற்கு மாற்றுக் கருத்துக்களைக் கூறாமல் இருக்கவும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். தம்பதிகள் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும். குடும்பத்தில் நிதானமாகப் பேசுவது அமைதியைத் தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகுவது போல் தோன்றும். குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் மாற்றுக் கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்குப் பேச்சுத் திறமை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல், வேலைப்பளு இருக்கும். மாணவர்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும்.

 

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, இளம் நீலம்

எண்கள்: 1, 2

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குப் போய் வேப்பிலை அர்ப்பணித்து வழிபடவும்.

 

சிம்ம ராசி வாசகர்களுக்கு

இந்த வாரம் ராசியில் செவ்வாய் - சுக்கிரன் இருக்கிறார்கள். ராசிநாதன் சூரியன் தனஸ்தானத்தில் இருக்கிறார். வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும்; குறிக்கோள் நிறைவேறும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மாற்றம் செய்ய

 

எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்கலாம். வாடிக்கையாளர் தேவைகளைச் சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவதை லட்சியமாகக் கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த வாக்குவாதங்கள் அகலும். வேலை நிமித்தமாகக் குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம். சுபச்செலவுகள் ஏற்படலாம். உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். பெண்களுக்கு எண்ணிய காரியம் கைகூடும். கலைத்துறையினருக்குக் காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகளுடன் பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள்.

 

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை

எண்கள்: 1, 3

பரிகாரம்: தினமும் சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வதால் காரியசித்தி கிடைக்கும்.

 

கன்னி ராசி வாசகர்களே

 

இந்தக் காலகட்டத்தில் ராசிநாதன் புதன் ராசியில் ஆட்சி உச்சமாக இருக்கிறார். எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம். தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தொழில், வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவதைத் தவிர்ப்பது நல்லது.

 

மேலதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும். குடும்பாதிபதி சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பெண்கள் மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்குமுன் தீர ஆலோசிக்கவும். கலைத்துறையினருக்கு உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்கள் நல்லது கெட்டதை யோசித்து எந்தக் காரியத்திலும் ஈடுபடவும்.

 

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

திசைகள்: வடக்கு, மேற்கு

நிறங்கள்: பச்சை, நீலம்

எண்கள்: 1, 5

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் பெருமாளுக்குத் துளசி கொடுத்து வணங்கி வர குடும்ப பிரச்சினை தீரும். பொருளாதாரச் சிக்கல்கள் அகலும்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

    ராசிபலன்இந்து ராசிபலன்வார ராசிபலன்ராசி பலன்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்ஜோதிடம்

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author