அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோயில் 29-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

அடையாறு ஸ்ரீஅனந்த பத்மநாப சுவாமி கோயிலில் 29-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். | படங்கள்: பு.க.பிரவீன் |
அடையாறு ஸ்ரீஅனந்த பத்மநாப சுவாமி கோயிலில் 29-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். | படங்கள்: பு.க.பிரவீன் |
Updated on
1 min read

சென்னை: அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. சென்னை அடையாறில் உள்ளஅனந்த பத்மநாப சுவாமி கோயிலின் 29-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

அதைத்தொடர்ந்து அனந்த பத்மநாபசுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. மாலையில்கலசஸ்தாபனம் யாகசாலையும், தீபாராதனையும், தொடர்ந்து லட்சுமி நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஅனந்த பத்மநாப சுவாமி.
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஅனந்த பத்மநாப சுவாமி.

மார்ச் 8-ம் தேதி வரை 11நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், ஒவ்வொரு நாளும், வெவ்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான மார்ச் 2-ம் தேதிகாலை கருட சேவையும், மார்ச் 4-ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

பின்னர், மார்ச் 6-ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். மேலும்,பிரம்மோற்சவம் நடைபெறும் அனைத்து நாட்களும் மாலையில் தர்ம பரிபாலன சபா சார்பில்இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in