திருப்பதி | ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு

திருப்பதி | ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு
Updated on
1 min read

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் 80 சதவீத டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவே வெளியிட்டு வருகிறது. இதனால் ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு பக்தர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேவஸ்தானம் இணையத்தில் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்து போய் விடுகின்றன. இந்நிலையில், வரும் மார்ச் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு, ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான அங்கபிரதட்சனம் டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து, மார்ச் மாதத்திற்கான ஆர்ஜித சேவைகளான திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in