

கோவை: ஈஷாவின் மஹா சிவராத்திரி விழா வரும் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி, இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும் ‘யக்ஷா’ கலைத் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. இந்நிகழ்ச்சி கலாச்சாரம், இசை மற்றும் நடனத்தின் செறிவை பறைசாற்றும் விதமாக உலகப் புகழ் பெற்ற கலைஞர்களைக் கொண்டு நடத்தப் படுகிறது.
விழாவின் தொடக்கமாக ஜெய தீர்த் மேவுண்டியின் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று (பிப். 16) புல்லாங்குழல் இசைக் கலைஞர் சஷாங்க் சுப்ரமணியத்தின் இசை நிகழ்ச்சியும், நாளை மாதவி முத்கல் குழுவினரின் ஒடிசி நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த கலை நிகழ்ச்சிகள் ஈஷாவில் உள்ள சூர்யகுண்டம் மண்டபம் முன்பாக தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.