

திருப்பதி: வாயுத்தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று மாலை மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்றம் வெகு சிறப்பாக நடந்தது.
முன்னதாக நேற்று முன் தினம், பக்த கண்ணப்பர் கோயிலில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காளத்திநாதர் கோயில் முன் உள்ள தங்க கொடி மரத்தில் வேதங்கள் முழங்க, உற்சவர்கள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர்.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக நேற்று காலை புதிய வெள்ளி சப்பரத்தில் ஞானபூங்கோதை சமேதமாய் உற்சவர் காளத்திநாதர், விநாகர், முருகர் ஆகியோரின் திருவீதி உலா நடந்தது. மாலை கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.