திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கான ரூ.300 ஆன்லைன் டிக்கெட் 13-ல் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கான ரூ.300 ஆன்லைன் டிக்கெட் 13-ல் வெளியீடு
Updated on
1 min read

திருமலை: திருப்பதி ஏழுமலையானை நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொண்டு, குறிப்பிட்ட நாளன்று சுவாமியை தரிசித்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக ரூ. 300 சிறப்பு தரிசன டோக்கன்களுக்கு நடுத்தர வர்க்க பக்தர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஆதலால், இந்த டிக்கெட்டுகள் நேரில் வழங்கப்படாமல், ஆன்லைனில் மட்டுமே தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

இந்நிலையில், இம்மாதம் பிப்ரவரியில் வரும் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான ரூ. 300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்டுகள் வரும் 13-ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் வழங்கப்பட உள்ளதாக நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அங்கப்பிரதட்சணம் டிக்கெட்டுகள்: இதேபோன்று, அங்கப்பிரதட்சணம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் வெளியாக உள்ளது. தேவஸ்தான இணையத்தின் மூலம் இம்மாதம் 22ம் தேதி முதல் 28-ம்தேதி வரையிலும், அதேபோல், அடுத்த மார்ச் மாதத்திற்கும் அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகளை பக்தர்கள் ஆன்லைனில் இன்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in