ஈஷாவில் தைப்பூச திருவிழா

முளைப்பாரியிலேயே லிங்கபைரவி தேவியின் உருவம் வடிவமைக் கப்பட்ட தேரை ஈஷாவுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்ட மக்கள்.
முளைப்பாரியிலேயே லிங்கபைரவி தேவியின் உருவம் வடிவமைக் கப்பட்ட தேரை ஈஷாவுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்ட மக்கள்.
Updated on
1 min read

கோவை: ஈஷாவில் உள்ள லிங்க பைரவியில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் கள்ளிப்பாளையத்தில் இருந்து முளைப்பாரிகளை தலையில் ஏந்தி லிங்கபைரவிக்கு பாத யாத்திரையாக வந்து தரிசனம் செய்தனர்.

ஆண்கள் கரகம் ஏந்தி முன் செல்ல, அவர்களைத் தொடர்ந்து முளைப்பாரியிலேயே லிங்கபைரவி தேவியின் உருவம் வடிவமைக்கப்பட்ட தேர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. வழியில் ஆலாந்துறை, மத்துவராயபுரம், இருட்டுப்பள்ளம், செம்மேடு என பல்வேறு இடங்களில் கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.

இது தவிர, தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கடந்த 21 நாட்கள் சிவாங்கா விரதம் மேற்கொண்டனர். அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் லிங்கபைரவிக்கு வந்து தேங்காய், தானியங்கள், நெய் தீபம் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து விரதத்தை நிறைவு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in