வண்டியூர் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி

வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன். படம்: நா.தங்கரத்தினம்
வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன். படம்: நா.தங்கரத்தினம்
Updated on
1 min read

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்பத் திருவிழாவையொட்டி வண்டியூர் தெப்பக் குளத்தில் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தை தெப்பத்திருவிழா ஜன.24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 10-ம் நாளான நேற்று வண்டியூர் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை, சுந்தரேசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இவ்விழாவின் 11-ம் நாளான இன்று (பிப்.3) சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழா நடைபெறும். நாளை (பிப்.4) தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. அதனையொட்டி அதிகாலை 5 மணியளவில் மீனாட்சியம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலுக்கு சென்றடைவர்.

பின்னர், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காலை 10.35 மணியளவில் சுவாமியும், அம்மனும் எழுந்தருள்வர். பக்தர்கள் வடம்பிடிக்க காலையில் 2 முறை தெப்பத்தை சுற்றி வருவர். பின்னர் மாலையில் தெப்பக்குளம் மைய மண்டபத்தில் எழுந்தருளி பத்தி உலாத்தி தீபாராதனை முடிந்த பின்பு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி ஒருமுறை தெப்பத்தை சுற்றி வருவர்.

அதன் பின்பு அங்கிருந்து புறப்பாடாகி கோயிலில் சேத்தியாவர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், துணை ஆணையர் ஆ.அருணாசலம் தலைமையிலான பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in