தை கிருத்திகையையொட்டி பழநியில் சுவாமி தரிசனத்துக்கு குவிந்த பக்தர்கள்

தை கிருத்திகையையொட்டி பழநியில் சுவாமி தரிசனத்துக்கு குவிந்த பக்தர்கள்
Updated on
1 min read

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தை மாத கிருத்திகையை யொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து சின்னக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தார். முன்னதாக நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதன் பின் பக்தர்கள் வெள்ளத்தில், அரோகரா கோஷத்துடன் தங்க ரதப் புறப்பாடு நடைபெற்றது.

இதேபோல் திருஆவினன்குடி முருகன் கோயிலிலும் கிருத்திகையையொட்டி காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடனை செலுத்தினர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in