தெப்பத் திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தேரோட்டம்

தெப்பத் திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தேரோட்டம்

Published on

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைத் தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது. 9-ம் நாளான நேற்று காலை 7.15 மணி அளவில் உற்சவர் முருகன், தெய்வானை சர்வ அலங்காரத்தில் சிம்மாசனத்தில் எழுந்தருளினர். பின்னர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளி முட்டு தள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே அலங்கரிக்கப் பட்ட சிறிய வைரத்தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தேர் பிற்பகல் 11 மணி அளவில் மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது.

பத்தாம் நாளான இன்று தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. காலை 11 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவர். அன்று மாலை 6 மணிக்கு மேல் தெப்ப மைய மண்டபத்தில் பக்தி உலாத்துதல் முடிந்து சுவாமி, தெய்வானை தெப்பத்தில் மூன்று முறை வலம் வருவர். பின்னர் 16 கால் மண்டபத்தில் சூரசம்ஹார லீலை நடைபெறும். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in