திருப்பதி தேவஸ்தானத்தின் மொபைல் செயலி அறிமுகம்

திருப்பதி தேவஸ்தானத்தின் மொபைல் செயலி அறிமுகம்
Updated on
1 min read

திருமலை: பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் 'TTDevas thanams' எனும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மொபைல் செயலி மூலம் உலகம் முழுவதிலும் உள்ள ஏழுமலையான் பக்தர்கள், தங்களது மொபைல் செயலி மூலமாகவே தரிசனம், தங்கும் அறைகள், ஆர்ஜித சேவைகளை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

திருமலை திருப்பதி தேவஸ் தானம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து ‘TTDevasthanams' என்கிற புதிய மொபைல் செய லியை உருவாக்கி உள்ளது.

இதனை நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி அறிமுகப்படுத்தி வைத்துகூறியதாவது: இது ஒரு யூனிவர்ஸல் செயலியாகும். ஏழுமலையான் பக்தர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒன்று. இந்த செயலி மூலம்பக்தர்கள், அனைத்து தரிசன முன்பதிவு, தங்கும் இடம் முன்பதிவு, ஆர்ஜித சேவைகள் முன்பதிவு செய்யலாம்.

முதல் முறை: மேலும் குலுக்கல் முறை தரிசனம் முன்பதிவு, தற்போதைய திருமலை நிலவரம், பண்டிகை, விசேஷ நாட்கள் குறித்த விவரங்கள், இ-உண்டி,  வெங்கடேஸ்வரா பக்தி சேனல் ஒளிபரப்பு என இது ஒரு வழி காட்டி போல் செயல்படும். மொத்தத்தில் தகவல்களுடன் கூடிய ஒரு ஆன்மீக மொபைல் செயலி வெளிவருவது இதுதான் முதன் முறை.

இவ்வாறு தேவஸ்தான அறங் காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in