நாளை ஆன்லைனில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு

நாளை ஆன்லைனில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு
Updated on
1 min read

திருமலை: திருப்பதி ஏழுமலையானை நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் தரிசிக்கும் விதமாக ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வரும் 11-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் நடைபெற்று வருவதால், ஜனவரி 12-ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி வரை, இரு மாதங்களுக்கும் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

இதேபோன்று, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான டோக்கன்கள் நேற்று வெளியிடப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in