Published : 25 Dec 2022 07:51 AM
Last Updated : 25 Dec 2022 07:51 AM
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா பெரிய கந்தூரி விழாவை முன்னிட்டு நாகை ஜமாத் சார்பில் நேற்று மாலை நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் நடைபெற்றது. பள்ளிவாசலில் தொடங்கிய இந்த கொடி ஊர்வலம், சாலா பள்ளி தெரு, யாகூசைன் பள்ளி தெரு, பெரிய கடைத் தெரு, மாவட்ட அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், காடம்பாடி, நாகூர் செய்யது பள்ளி தெரு ஆகியவற்றின் வழியாக நாகூர் ஆண்டவர் தர்கா அலங்கார வாசலில் நிறைவடைந்தது.
பல்லக்குகளில் இருந்து புனித கொடிகள் இறக்கப்பட்டு, நாகூர் தர்காவில் பாத்திஹா ஓதப்பட்டு 5 மினராக்களிலும் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, ஜன.2-ம் தேதி இரவு சந்தனக்கூடு ஊர்வலமும், ஜன.3 அதிகாலை நாகூர் பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். சந்தனம் பூசும் விழாவை முன்னிட்டு ஜன.3-ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT