தேனி | சின்னமனூரில் மாதாந்திர தேய்பிறை அஷ்டமி விழா

சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Updated on
1 min read

தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் 166-வது மாதாந்திர தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது.

கொல்லிமலை குரு ஜீ தவத்திரு ருத்ராபதி சித்தர் தலைமை வகித்து வழிபாடுகளை நடத்தினார்.
நேற்று மாலை மகா அஷ்டபைரவர் யாகம் மற்றும் திருவிளக்கு வழிபாடு நடைபெறறது. இதனைத்தொடர்ந்து இன்று காலை பைரவருக்கு திருக்கைலாய சிவகணங்களின் இசை முழக்கத்துடன் 108 பால் குடம் எடுத்துவந்து அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு இரண்டாம் கால மகாஅஷ்ட பைரவர் யாகம், சங்காபிஷேகம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை செயல் அலுவலர் அ.நதியா மற்றும் ஸ்ரீ பைரவர் வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in